தங்களுக்கு கிடைக்கப்பெற்ற அருட்கொடைகளை எண்ணி திருப்திப்படுதலில் முதலில் காண்பித்த பொடுபோக்கு பின்னர் அவர்களை ஆட்சி செய்யும் கொடிய மானிடவியல் பண்பாக ஆட்கொண்டுவிடுகிறது. இதனால் இவர்கள் தங்களின் முன்னேற்றத்தில், தங்களின் சமூக வாழ்வியலில் அபிவிருத்தியை குறித்து கவனம் செலுத்துவதை மறுத்துவிடுகின்றார்கள்.
ஒரு மனிதனின் முன்னேற்றத்தை குறித்து இவர்களினால் ஜீரணித்துக்கொள்ள முடியாது போகின்றது. அடுத்தவனை கண்டு பொறாமை கொள்ளும் இந்த பண்பு அவர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளுக்குள் கஷ்டத்தை அனுபவிக்க வழிகோலுக்கிறது. அதுமட்டுமன்றி ஒருவனின் மகிழ்ச்சி, ஆரோக்கியமான வாழ்வு, சமூக வாழ்வின் தன்மை குறித்து துருவி விசாரணை செய்ய ஆரம்பிக்கின்றார்கள்.
இது காலவோட்டத்தில் ஒருவகை மனோநோய்க்கு அவர்களை உள்ளாக்குகின்றது. எதை பார்த்தாலும் சந்தேக உணர்வோடு சிந்திக்கும், பழகும் மனோநிலையை உண்டாக்குகிறது. இதனை அவர்கள் தொடர்ச்சியாக உணர்கிறார்கள். அது தவறு என்றும் அவர்களின் மனசாட்சி சாட்சியம் அளித்தபோதும் அவர்களினால் குறித்த துர்செயளில் இருந்து மீண்டுவரமுடியாத சாத்தானிய கைதியாக மாறுகின்றார்கள்.
"தன் அடியார்களில் தான் நாடியவர் மீது தன் அருட்கொடையை அல்லாஹ் அருளியதற்காக பொறாமைப்பட்டு, அல்லாஹ் அருளியதையே நிராகரித்து தங்கள் ஆத்மாக்களை விற்று அவர்கள் பெற்றுக் கொண்டது மிகவும் கெட்டதாகும்" (அல்-குர்ஆன் 2:90)
No comments:
Post a Comment