இயல்புநிலையில் ஆன்மாக்கள் தனது செயற்பாட்டை விஸ்தீரணம் செய்துகொள்ளவும், அதன் இயங்குநிலை தொடர்ச்சியினை பேணவும் இன்னொரு ஆன்மாக்களின் துணை தேவையாக உள்ளது. இந்த தருணம்தான் ஆன்மாக்களுக்கு இடையிலான பள்ளினத்துவம் வெளிக்கொணரப்படுகின்றது.
சுயாதீனம் என்பது நிலையான ஒன்றல்ல. அது புறப்பார்வைக்கு சுயாதீனமாக காணப்பட்டபோதும் எப்போதும் ஒரு வரையறை செய்யப்பட்ட சுற்றுப்பாதைக்குள் அல்லது ஈர்வை மண்டலத்தினுள் காணப்படுவதே இயல்பியல் நிலைப்பாடாகும். இல்லையேல் இயற்கை மாறுதல் அல்லது விதிவிலக்கு நிலைக்கு நோக்கப்படவேண்டிய ஒன்றாக கருதப்பட்டு இருக்குமே...
ஆன்மாக்கள் வெளிப்படுத்தும் சக்தி, ஆற்றல், அறிவு என்பன இந்த பிரபஞ்ச புறச்சூழலில் இருந்து நுகர்ந்துகொண்டவைதான். இவ்வாறு நுகர்ந்துகொண்டதில் வெளியீடு செய்யப்படும் ஒழுங்குபடுத்தப்பட்ட காரணிகளே பேசுபொருளாக மாற்றமடைகின்றது. இதில் காணப்படும் தனித்துவ தன்மைகள்தான் குறித்த ஆன்மாவை அடையாளம் காட்டும் வகையீடாக பிரதிநிதித்துவம் செய்கின்றதே தவிர வேறேதுமில்லை....
No comments:
Post a Comment