நல்லது எல்லாம் எழுதவேண்டும் என்று எனக்கு எந்த எல்லையும் வரையரையும் இல்லை. ஆனால் எழுதுவது அனைத்தும் எனக்கு நல்லது என்று தோன்றுவதே அவற்றை பகிரங்கமாக பதிவு செய்கிறேன்.
இவற்றை வாசிக்கவேண்டும், சிந்திக்கவேண்டும், மாற்றுக்கருத்து எழுதவேண்டும் என்ற ஒருதலைப்பட்ச சுயநல எதிர்பார்ப்பும் அற்றவன். இதனால் நீங்கள் அளிக்கும் அற்பமான வெகுமதிகள் பெருமதியற்ற மாயையாக நான் எப்போதுமே உணர்வேன்.
பெரும்பாலும் முகநூல் பக்கத்தை ஒரு தகவல் களஞ்சியசாலையக மட்டுமே இதுவரை காலமும் நான் உபயோகம் செய்துவருக்கிறேன்.
நீங்கள் காணும் சொற்பாமான ஆக்கங்களை விட பன்மடங்கு ஆக்கங்கள் வாசிக்கா பக்கங்களாக நான் மட்டும் வாசிக்கும் வகையில் திரைமறைவில் உள்ளதுதான். காலசூழ்நிலைக்கு ஏற்றால்போல் அவற்றின் திரை நீக்கப்பட்டு பார்வையாளர்களுக்கு பொதுப்படையாக வெளியீடு செய்யப்படுகின்றது.
Zikra Nawhal கூறுவதுபோன்று ....
உன் சிந்தனை முளைவிடும் விதை போன்று இருக்கவேண்டும். அதாவது உன்னுள் சுழலும் சிந்தை எப்போது இன்னொருவருக்கு பயனுடையதாக மாறுகிறதா அப்போதே அச்சிந்தை உயிர்பிக்கப்படுகின்றது. அதுவரை உயிர்பற்ற விதை போன்று பயனற்றதாயே உறங்குநிலை கழிக்கும்.
சில நண்பர்களிடம் மீண்டும் மீண்டும் ஒரு விசயத்தை நான் புரிய வைக்க வேண்டியிருக்கிறது. நீங்கள் ஏன் இப்படி இப்படியெல்லாம் எழுதக்கூடாது என்று என்னிடம் கேட்கிறார்கள்???
நான் ஏன் அப்படியெல்லாம் எழுத வேண்டும்?
உண்மையில் எனக்கே எனக்காக மட்டுமே நான் எழுதுகிறேன். உங்களின் மனம் விரும்பும் வகையில் எழுதுவதற்கு நான் கேளிக்கையாளனோ பிரச்சாரகனோ அல்ல. இதனால் மற்றவர்களுக்குப் பயன் ஏற்படுவது உபரியானது. முடிந்த மட்டும் யாரையும் புண்படுத்தாமல் எழுத முயற்சிக்கிறேன்.
என் தேடல்களை, கண்டடைவுகளை, கருத்துகளை பதிவு செய்கிறேன். அவற்றில் ஏதேனும் ஒன்று உங்களைப் புண்படுத்தினால் சொல்லுங்கள், நீக்கிவிடுகிறேன். அவ்வாறு நீக்குவதனால் எனக்கு இழப்பேதும் இல்லை. ஏதோ எனக்கு விதிக்கப்பட்ட பணியை நிறைவேற்றுவதுபோல எழுதுகிறேன். எழுதுவதால் மனம் நிறைவடைகிறேன். அவ்வளவுதான்.
No comments:
Post a Comment