குறித்த இருவகை மானிடர்களும் தங்களின் அறிவு மற்றும் திறனில் ஒப்பீடு செய்யக்கூடிய வேறுபாட்டை பெருமளவு கொண்டிருப்பதில்லை. மாறாக உழைப்பு மற்றும் தேடலில் அதற்கு அவர்கள் அளிக்கும் முக்கியத்துவமும் அர்பணிப்பிலும் வெளிப்படும் வேறுபாடே பிரதான எல்லைப்படுத்தல் காரணியாக உள்ளது.
தொழிற்பாட்டு நிலை படைப்பாளிகள் எப்போதும் ஒருபடி முன்னே அவர்கள் மற்றவர்களில் இருந்து தனித்துவமாக திகழ்வார்கள். இதற்கு அவர்களின் துறைசார் தொடர் கற்கை, தேடல், வெளியீடுகள் துணையளிக்கின்றது. ஆனால் பரிதாப நிலையில் இருக்கும் இடைநிலை நல்ல ஆளுமைகளின் சமூகம் சார்ந்த தாக்குதிறன்தான் சமுதாயத்தில் பகிறந்தளிப்பு செய்யப்படாமல் விரயமாகின்றது.
தான் பெற்ற அறிவை தான் தொழிற்படும் தளத்தில் எப்போதும் தொழிற்பாட்டு நிலையில் இயங்கும் வகையில் எமது அன்றாட வாழ்வியல் மேலாண்மை செய்யப்படவேண்டும். இல்லையேல் குறித்த துறையில் இருந்து புறந்தள்ளப்பட்டு ஒத்துக்கப்படுவீர்கள். இது உங்கள் அறிவு ஆற்றலின் வளர்ச்சியில் பாரிய பின்னடைவை எதிர்காலத்தில் உண்டாக்கி உங்களை இயலாமை உள்ளவராக அடையாளம் காட்டிவிடும்.
No comments:
Post a Comment