எப்போதும் எல்லோரும் சொல்லும் விடயமே என்னை இவர்கள் நம்பிக்கை துரோகம் அல்லது ஏமாற்றம் செய்துவிட்டார்கள் என்று... உண்மையில் நாம் ஒவ்வொருவரும் ஏதோவொரு வகையில் விரும்பியோ விரும்பாமலோ யாரோ ஒருவரை ஏமாற்றிக்கொண்டுதான் உள்ளோம். இவ்வாறுதான் எமது சமூக வாழ்வியல் கட்டமைப்பு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.
நாம் என்னதான் பொதுநலவாதியாக இருந்தபோதும் எமக்குள் உள்ளே ஒரு படு மோசமான சுயநலவாதி குடிகொண்டுள்ளான். அந்த சுயநலவாதி வெளிப்படும் தருணைத்தை பொறுத்தே நாம் சமூக அரங்கில் அங்கீகாரம் பெருக்கின்றோம். எமக்குள் இருக்கும் சுயநலவாதியின் தன்மை எம்மை சார்ந்த சூழலில்தான் தீர்மானம் செய்யப்படுகின்றது. சூழல் என்ற வகையில் நாம் உறவாடும் மனிதர்கள், இயற்கை செயற்கை மூலங்கள், எமது வாழ்வாதார வளங்கள், மார்க்க கட்டமைப்புகள், நம்பிக்கை, தேவைகளும் விருப்பு வெறுப்புகளையும் குறிப்பிட்டு அடையாளம் காட்டலாம்.
பெரும்பாலான மனிதர்கள் அவர்களின் இயலாமை காரணமாக சுயநலவதிகளாக அடையாளப்படுத்தப்படுகின்றார்கள். உண்மையில் ஒவ்வொருவரின் மனசாட்சியும் தான் யார் என்பதை எப்போதும் உள்ளிருந்து சாட்சியம் அளித்துக்கொண்டே இருக்கும்.
No comments:
Post a Comment