இயல்பாகவே மனிதன் பேராசை கொண்டவன். இதனால்தான் எமது மூதாதையான ஆதாமும் ஹவ்ஆ அவர்களும் சுவனத்தில் கிடைத்த பேரின்பத்தை மேலும் பேராசை கொண்டு சிற்றின்பதில் தண்டனைக்கு ஆளாக்கப்பட்டார்கள். ஆக மனிதன் எப்போதும் பேராசை மாயையைத்தான் அதிகம் நம்புகிறான். இதனால்தான் அவன் தான் அனுபவிக்கும் இயல்புநிலை மகிழ்ச்சியைக்கூட பூரணமாக நுகர்ந்துகொள்ள முடிவதில்லை. மாறாக அவன் தன்னை சூழலியல் ஒப்பீட்டு வாழ்வியலில் அடிமைப்படுத்திக்கொண்டான்.
மனிதனின் ஆசை அவனை எப்போதும் ஒரு உயர்ந்த நிலைக்கு வளர்த்து செல்கிறது. அத்தோடு ஆசை அவனை முயற்சியாளனாகவும் நம்பிக்கை கொண்ட துணிவாளனாகவும் வலுவூட்டுகிறது. ஆனால் பேராசை சோம்பேறியாகவும் தங்கி நிற்பவனாகவும் அவனை இயலாமலாக்குகின்றது. இதனால்தான் சாதாரண ஒரு சாதாரண இடைத்தட்டு வர்க்கத்தை சேர்ந்த நபர்கள் அனுபவிக்கும் மகிழ்ச்சியையும் சமூக வாழ்வின் நுண்ணிய உணர்வுகளையும் மேட்டுக்குடி வாழும் ஒருவனினால் உணர்ந்துகொள்ள முடிவதில்லை.
அசையும் பேராசையும் அவன் வாழுகின்ற சூழலின் முடிவாகின்றது. இருந்தபோதும் சூழலில் தங்கி நிற்கும் காரணிகளில் பிரதானமாக உளவியல், சமூகவியல் பண்புகள் முக்கிய தளத்தை பெறுகின்றது. போராட்டம் நிறைந்த சமூகப்பொது வாழ்க்கைக்கான நிலைத்திருப்பே அவனை ஆசை, பேராசை கொண்டவனாக தீர்மானம் செய்கிறது.
ஆசை ஒரு கயிற்றை போன்றது. ஆனால் பேராசை ஒரு வலையை போன்றது. ஆசை கொள்பவன் கயிறை தனக்கு வேண்டியது போன்று உபயோகம் செய்து வாழ்வை வாழ்ந்து மரணிக்கிறான். பேராசை கொள்பவன் வலையில் சிக்குண்டு மீண்டு கொள்ள போராடி இறுதியில் மறித்து போகிறான்.
No comments:
Post a Comment