சடப்பொருட்கள் யாவற்றுக்குமே முதல் மூன்று பரிணாமங்கள் இருக்கும். ஆனால் இங்கே நாம் பேச இருப்பது இரண்டாம்நிலை பண்புகளை குறித்து.
மனிதனை உதாரணமாக எடுத்துக்கொண்டால் அவனது சக்தி ஆற்றல் இரண்டும் அறிவு (சிந்தனை), திறன் (செயற்பாடு) என்று குறிப்பிடலாம். எந்தவொரு மனிதன் குறித்த இரு பண்புகளையும் சமநிலையில் பேணுகிறானோ அவனே உலக வாழ்க்கையை சரியாக முகாமைத்துவம் செய்கிறான் என்று கருதலாம்.
ஆனால் இந்த சமநிலை சாதாரணமான ஒரு விடயதானம் அன்று. இது குறித்து அல்குர்ஆன் இவ்வாறு மேற்கோள் காண்பிக்கின்றது.
“சிந்தித்துப் பார்க்கக் கூடியவன் அதில் சிந்திக்கும் பொருட்டு, நாம் உங்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கவில்லையா?" (அல்-குர்ஆன் 35:37)
ஆன்மாவை அலங்கரிக்கும் இரு வகை கூறுகள் சிந்தனையும், செயற்பாடுகளும். இவற்றின் சமநிலை எப்போதும் மனிதனின் வாழ்க்கை கோலத்தில் தங்கி நிற்கின்றது. ஒரு மனிதனின் குறித்த சூழலை தீர்மானம் செய்யும் தளத்தை அவன் தன்னகத்தே கொண்டுள்ள இயல்பான பண்புகளும், அவனது குணாதிசயங்களுமே எடுத்துக்கொள்கின்றது.
மனிதன் ஒருவன் செய்யும் புண்ணியங்களும், பாவங்களும் சூழலில் அவன் காண்பிக்கும் சமநிலையினை பொறுத்து கூடி குறைகின்றது. வெறுமனே ஒரு குற்றச்செயலுக்கு முழுக்க முழுக்க தனி ஒருவனை சாடிவிட முடியாது. மாறாக அவன் தன்னகத்தே மற்றும் புறத்தே கொண்டுள்ள தொடர்புகளையும் இதில் பகுப்பாய்வு உட்படுத்தவேண்டும்.
சிந்திணையினால் செயல்கள் வடிவமைக்கப்படுகின்றது. செயல்களினால் ஆன்மா பூரணத்துவம் அடைகின்றது.
ஒரு மனிதனை எப்போது அவனது சிந்தனை மற்றும் செயலில் சமாநிலைப்படுத்த கற்றுக்கோடுக்கிறோம் அதுவே உண்மையான வழிகாட்டுதல்....
No comments:
Post a Comment