சமூகஅரங்கில் வேலைசெய்யும் சமூக ஆர்வலர்களை இந்த இயற்கை பண்பு அதீத தாக்கத்தை உண்டுபண்ணும். சாதாரணமாகவே மனிதர்களின் இயல்பிற்கு ஒத்திசைவாக வெளிப்படும் இந்த எதிர்பார்ப்பு காலப்போக்கில் எதிர்பார்ப்பே பிரதான காரணியாக தொழிற்பட ஆரம்பித்துவிடுகின்றது. இந்த கட்டத்தைத்தான் இஸ்லாம் எச்சரிக்கை செய்கின்றது.
இயல்பான குணாதிசயம் எப்போது எல்லை கடக்கிறதோ அப்போது மனிதன் தன இயல்பு நிலையில் இருந்து அத்துமீற எத்தனிக்கின்றான். இந்த எத்தனிப்பு காலப்போக்கில் அவனுள் ஒரு முகஸ்துதியையும், தற்பெருமையையையும், அகங்காரத்தையும், இறுமாப்பினையும் உண்டாகிட தூண்டுகோளாகிறது. இறுதியில் அவன் வரும்புமீறியவனாக தன்னைத்தானே அடையாளம் படுத்திக்கொள்கிறான்.
எப்போது மானிட இயற்கை அமைப்பு மாற்றமடைந்து சாத்தானிய துர்நடத்தை வெளிப்படுகிறதோ அப்போது அவனது எண்ணங்களும், செயல்களும் பயனற்றதாக மாறுகிறது. இவை அனைத்தும் சாதாரண ஒரு எதிர்பார்கையின் விளைவுகளாக கருதுவதா? அல்லது நடைமுறையில் நாம் எதிர்நோக்கும் சிக்கல்களாக கருதுவதா என்பதுவே சமூக பணியாளர்கள் புரிந்துகொள்ளவேண்டியது.
No comments:
Post a Comment