பொதுவெளியில் நடைபெறும் அறிவார்ந்த உரையாடல் (Intellectual dialogue) எப்போதும் ஒரு மனிதனின் ஆளுமை பண்பை இயல்பாகவே வெளிக்காட்டிவிடும். சாதாராண மனிதர்களுக்கும் துறைசார் நிபுணத்துவம் கொண்ட சமூகத்திற்கும் இடையில் பாரியதொரு இடைவெளி எப்போதுமே நிலவும். இந்த இடைவெளியை ஒரு ஆளுமைத்தலைவன் இணைப்புப்பாலமாக தொழிற்படுகிறான். இதனால் அவனது வழிகாட்டல் இரு சாராரையும் திருபதிப்படுத்துவதாய் அமைகின்றது.
ஆளுமை (Personality) என்பது வெறுமனே ஏட்டுக்கல்வியோடும், காகித சான்றிதழ்கள் மூலமும் அளவீடு செய்யமுடியாத காரணியாகும். எந்தவொரு மனிதனும் தனதளவில் அவனது ஆளுமை தளத்தை வளர்த்துக்கொண்டுதான் உள்ளான். திறன்களும், பண்புகளும் ஒருமித்தே ஆளுமைகளாக வெளிப்பட்டபோதும் குறித்த தனியன் அவனது ஆளுமைகளை விரிவாக்கமும் வெளியீடும் செய்யவும் பொருத்தமான தளம் உருவாக்கப்பட்டாலே அன்றி; இதற்கான அளவீடுகளை எம்மால் கணிப்பீடு செய்துவிடமுடியாது.
வாய்ப்புகளையும், சந்தர்பங்களையும் அளிப்பதன் மூலமே ஆளுமையின் திறன்களையும், பண்புகளையும் எம்மால் நுகர்ந்துகொள்ள முடியுமே தவிர வேறு வழிகள் இங்கு இல்லை என்பது எனது தனிப்பட்ட வாதம்....
No comments:
Post a Comment