மனிதனின் பகுப்பாய்வு சிந்தனை திறன்தான் இந்த குற்றவுணர்வை உண்டாக்க காரணமாக அமைகிறது. அவன் கொண்டுள்ள சடங்கு, சம்ரதாயங்கள் மற்றும் தான் பின்பற்றும் சமூக வழக்காறுகள், சமய கட்டுப்பாடுகள், பண்பாட்டியல், சூழல் நியதிகள் மற்றும் வாழும் சூழலியல் சட்டங்கள் என்பனவே இந்த உணர்ச்சியை மதிப்பீடு செய்கின்றது.
ஒருவன் எந்த அளவிற்கு அவன் தன்னகத்தேயான பின்பற்றும் இயல்புகளிற்கு ஒழுகுகிறானோ அந்த அளவிற்கு அவனது மனசாட்சி திருப்தியை அளிக்குகின்றது. இதற்கு எதிர்மாறாக தான் கொண்டுள்ள கட்டுப்பாடுகளில் எல்லை கடத்தலை அல்லது வரம்புமீறுதலை உண்டாக்கினோ அவ்வளவிற்கு அவனது குற்றவுணர்ச்சி பீடிக்கின்றது.
எப்போதும் எல்லோருமே ஏதோவொரு குற்றவுணர்ச்சிக்கு அகப்பட்ட சிலந்திவலை பூச்சிகள் போலத்தான் உள்ளோம். இந்த தளம்பல் நிலைதான் எம்மை இந்த சூழலில் மானிடன் என்ற உணர்வு மீட்டுகின்றது. இந்த தொடர்ச்சியின் விளைவுதான் நாம் பல்லின மனிதர்களுடன் கொண்டுள்ள ஆளிடைத்தொடர்பின் விரிவு. அத்தோடு தன்னிலை ரீதியான குற்றவுணர்வின் தாற்பரியமே எம்மை இறையியல் குணத்தில் இருந்து நாம் பலவீனமானவர்கள் என்று வேறுபடுத்தி காட்டுகின்றது. தவறுகளை மீண்டும் மீண்டும் விரும்பியோ விரும்பாமலோ செய்து அதற்கான மிக அடிமட்ட குற்றப்பரிகாரமான குற்ற உணர்வு எமது மனசாட்சி நினைவு கூறுகிறது.
ஆனால் நாம் இங்கு கவனிக்கவேண்டிய முக்கிய ஒரு புள்ளிதான் குற்றவுணர்வு தூண்டப்படும் நிலைப்பாடு. இந்த குற்றவுணர்திறன் அடிப்படையிலேயே நாம் எமக்குள் சாட்சியம் அளிக்கிறோம் நாம் பாவியா அல்லது புன்னையவாலனா என்று....
No comments:
Post a Comment