பாவங்களை பொறுத்தமட்டில் நேரடியாக தடுக்கப்பட்டவற்றில் மனுதனுக்கு எந்த சக்தியும் இல்லை குறித்த சட்டத்தில் முரண்பாட்டை காண்பதற்கு. இது ஒருவகையான இறையியல் கட்டளைக்கு கட்டுப்படும் பண்பு. இதற்கு காரண காரியங்களை வியாக்கியானம் செய்து தர்க்கம் செய்து சரிகாணமுடியாது.
இரண்டாம் நிலை ஒன்று உள்ளது. அது நேரடியான எந்த ஆதாரங்களை கொண்டும் ஆகுமாக்கப்பட்டது தடுக்கப்பட்டது என்ற நிர்ணயம் செய்யமுடியாதவை. இதனை இஜ்திஹாத் (இஜ்மா, கியாஸ்) அடிப்படையில் பலதரப்பட்ட துணை மூலாதாரங்களை கொண்டு வகையீடு செய்யப்பட்டு ஒரு தற்காலிக முடிவுக்கு வரவேண்டும். இது குறித்த பிரச்சினைக்கான சூழல், சந்தர்ப்பம், சாரார், சமுதாய கலாசார போக்கு, மற்றும் நாட்டுச் சட்டம் என்பவற்றை அடித்தளமாக கொண்டு அமையும்.
இந்த பின்னணியில் மேலும் சில சிக்கலான நடைமுறை வாழ்வியல் சார்ந்த பிக்ஹு முரண்பாட்டிற்கு இஸ்லாமிய பிக்ஹு கலை அறிஞர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களின் ஆய்வு புலங்கள் ஒப்பியல் செய்யப்படுவது அவசியமாகும். அவ்வாறான நீண்ட உரையாடல் மூலமாகவே நடைமுறை வாழ்வியல் சார்ந்த சிக்கலுக்கு தீர்வுகளை முன்வைக்க முடியும்.
குறித்த கருதுகோளைச் சார்ந்து #சுய_இன்பம் (Masturbation) தொடர்பான சந்தேகங்கள் முடிவுக்கு கொண்டுவர முடியும் என்பது எனது நிலைப்பாடு. ஏனெனில் இவ்வாறான தலைப்புகள் சமூக அரங்கில் பேசுபொருளாக்கப்படவில்லை என்பது துரதிஷ்டம் தான்....
No comments:
Post a Comment