கிச்சு கிச்சு மூட்டுவதால் ஏன் சிரிக்கிறோம் ??
அடிப்படையில் இருந்து தெரிந்துகொண்டால் தான் தெளிவாக புரியும் என்ற காரணத்தினால் நம் சருமத்தில் ,மேல்தோலில் (Epidermis ) வியர்வை சுரப்பிகள்,மயிர்க்கால்கள் ,நரம்பு நார் முடிவுகள் (Nerve endings ) போன்ற பல முக்கிய பாகங்கள் உண்டு. தொடுதலால் (Touch ) ,நரம்பு நார் முடிவுகள் தூண்டிவிடப்பட்டு , நேரடியாக நம் மூளைக்கு மின்சார சமிக்ஞைகளை (Electric Signals) அனுப்பும். நம் மூளை ,இது போன்ற தொடுதலை ஆய்வு செய்ய மூன்று முக்கிய ஆட்களை நியமித்திருக்கும்.
யாரந்த அந்த முக்கிய ஆட்கள் ? இவர்களை பற்றி பார்ப்பதற்கு முன், கிச்சு கிச்சுவை பற்றியும் அதன் வகைகளை பற்றி தெரிந்துகொள்வோம்.இவற்றை பற்றி தெரிந்து கொண்டால் தான்,மேல் கூறிய முக்கிய ஆட்களின் பணி எளிதில் புரியும்.
கிச்சு கிச்சு :- பொதுவாக கிச்சு கிச்சுகள் ,ஒரு விதமான வலி.நம் உடல் அதனிடமிருந்து தற்காத்துக்கொள்ள போராடும் அல்லது சரணடையும்.
கிச்சு கிச்சுகளில் இரண்டு வகைகள் உண்டு .
இனி வரும் ஆங்கில பெயர்கள் உச்சரிக்கவும் ,ஞாபகம் வைத்துக்கொள்ளவும் சற்று கடினமானதே. பெயர்களை விட்டுவிட்டு பெயர்களின் பொருளை புரிந்தாலே சிறப்பானது
1) நிஸ்மிஸிஸ் (Knismesis) : ஆங்கிலத்தில் feather touch பற்றி கேள்வி பட்டிருப்போம்.அதாவது முக மிக மிருதுவான,அழுத்தம் குறைவான தொடுதல். உதாரணம் : "ஈ " நம் மூக்கில் மீது உட்காரும் போது வரும் ஒரு விதமான கிச்சு கிச்சு மூட்டக்கூடிய கூச்ச உணர்வு.2) கர்கலேசிஸ் (Gargalesis) : சற்று அழுத்தமான தொடர் தொடுதல். இது தான் தான் நம்மை சிரிக்க வைக்கக்கூடிய கிச்சு கிச்சு. சரி ஓகே,இப்போ நம் மூளை நியமித்த அந்த மூன்று முக்கிய ஆட்களை பற்றி பார்ப்போம்.
1) சோமேட்டோசென்சரி கார்டெக்ஸ் (Somatosensory Cortex) : - இவர் , அழுத்தத்தின் அடிப்படையில் தொடுதலை ஆய்வு செய்வார்.அதாங்க மேல சொன்ன அழுத்தம் கம்மியான தொடுதல் , நிஸ்மிஸிஸ் மற்றும் அழுத்தம் அதிகமான தொடுதல், கர்கலேசிஸ்.
2) ஆன்டீரியர் சிங்குலேடெட் கார்டெக்ஸ் (Anterior Singulated Cortex):- இவர் தாங்க நம்ப மகிழ்ச்சையான உணர்வுகளுக்கு சொந்த காரர். நமக்கு புன்முறுவல்,சிரிப்பு,புல்லரிப்பு ஏற்பட காரணம் இவரே .
கிச்சு கிச்சு மூட்டும் போது நமக்கு சிரிப்பு இவரால் தான் ஏற்படுகிறது.நாம் சிரிப்பதனால் ,எண்டார்பின்(Endorphin) எனும் ஹார்மோனும் தூண்டப்பட்டு சுரக்கும். பதிலின் இரண்டாம் வரியில், கிச்சு கிச்சு மூட்டுவதும் வேதனை மூட்டும் சித்ரவதை என நான் குறிப்பிட்டதை சற்று நினைவுகூருங்கள். ஏனென்றால், தற்போது தான் கதையின் நாயகனை அறிமுகம் செய்யும் நேரம்.
ஹைப்போதலாமஸ் (Hypothalamus) :- இவரை பற்றி தனியாக ஒரு பெரும் பதிவே போடலாம்.நமக்கு வலி ஏற்படபோவதை முன்கூட்டியே மூளைக்கு சிக்னல் அனுப்பி, நம் மூளையை தயார் நிலையில் வைத்துவிடும். வலிக்கு எதிராக போராட, தற்காத்து கொள்ள உதவும்.
கிச்சு கிச்சு மூட்டுவதும் ஒரு விதமான வலி தானே ,சோ,கிச்சு கிச்சு மூட்டியவுடன்,ஹைப்போதலாமஸ்,நம் மூளைக்கு சிக்னல் அனுப்பிவிடும்.நம் மூளையும் ,நம் உடலுக்கு தற்காத்து கொள்ள கட்டளை இட்டுவிடும். இதன் காரணமாகவே ,கிச்சு கிச்சு மூட்டுபவரை ,நம் தடுக்க முயற்சிக்கிறோம் அல்லது "போதும் போதும் விட்றுங்க" என சரணடைந்து விடுகிறோம்.
சரி, ஏன் நம் உடலில் ஒரு சில பாகங்களில் மட்டும் கிச்சு கிச்சு மூட்டினால் சிரிப்பு வருகிறது ??
நம் உடலில்,அக்குள் பகுதி ,கழுத்து,வயிற்று பகுதி ,அல்லது பாதத்தில் கிச்சு கிச்சு மூட்டப்பட்டால் ,நாம் சிரிக்கிறோம்.இதன் காரணம் ,இந்த பகுதிகள் அனைத்தும் சென்சிடிவ் ஆனவை மற்றும் உடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிவை.
உதாரணம் : கழுத்து பகுதியில் உள்ள கரோட்டிட் ஆர்ட்டெரி(Carotid Artery) ,நம் மூளைக்கு இரத்தத்தை அனுப்பும் மிக முக்கிய பாகம்.இதன் காரணமாகவே கழுத்து பகுதியில் கிச்சு கிச்சு மூட்டினால் ,நம் உடல் நம்மை தற்காத்து கொள்ள போராடுகிறது. அதே போல்,பாதத்தில் Meissner's corpuscles என்ற நரம்பு ஏற்பியல் (Nerve receptor ) உள்ளது.இது எக்ஸ்ட்ரா சென்சிடிவ் பகுதி..
No comments:
Post a Comment