
அண்மைக்காலமாக ஸ்மார்ட்போன் பாவனை அதிகரித்துள்ளது. இதில் ஒருவரோடு உரையாடும் உரையாடலை பதிவு செய்தல், சமூக வலைத்தளம் மற்றும் தனிப்பட்ட குறுந்தகவல் பரிமாற்றங்களை ஆதாரப்புகைப்படம் எடுத்தல் போன்ற மனோவியல் சார்ந்த உளநோய்க்கு அதிக நபர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.
இந்த பண்புகள் கீழ்வரும் உளவியல் சார் பண்புகளை வெளிக்காட்டுகின்றது.
👉 ஒரு மனிதனை மன்னிக்கும் மனப்பாங்கை இல்லாமல் செய்துவிடுகிறது.
👉 மனிதன் ஒருவனை குற்றம், பிழை காணும் சந்தர்ப்பத்தை அதிகரிப்பத்தோடு மற்றும் தன்னிடம் உள்ள வலுவை மறைத்து பழிவாங்கும் குரோத மற்றும் நயவஞ்ச மனப்பாங்கை தோற்றுவித்துள்ளது.
👉 உறவுமுறை சார்ந்த வெளிப்படு தன்மை (Privacy), நம்பிக்கை மற்றும் புரிந்துணர்வுடன் பழகும் சமுதாய ஆற்றலை இல்லாமலாக்கிவிட்டது.
👉 ஒருவர் மீதான நட்பாசை, நன்மதிப்பை இழுவுபடுத்தும் நிலைக்கு எம்மை தள்ளி நயவஞ்சக வெளிப்பாட்டை தூண்டுகிறது.
👉 தனிமனித தவறுகள், அறியமைகள், மற்றும் மாற்றுக்கருத்து வெளிப்பாட்டை மனிதன் என்ற உயர்ந்த மட்ட சிந்தனை ரீதியில் ஏற்று அதனை மதிப்பளித்து மீள் திருத்தும் சுட்டிக்காட்டும் பண்பை இலக்கச்செய்துள்ளது.
👉 தனிமனித மரியாதை, கெளரவம் அளித்தல் சார்ந்தவைக்கு சந்தேகத்தை உண்டாகிவிட்டது.
👉 உண்மையாக மனம் திறந்து பேசுதல், பழகுதல், கருத்து பரிமாறுத்தலுக்கு சந்தேகத்தையும் முற்றுப்புள்ளியையும் வைத்துள்ளது...
ஏன் நீங்கள் உரையாடல் ஒலி, ஒளிப்பதிவு செய்கிறீர்கள். அவ்வாறு செய்யும் நபர்கள் எனது தனிப்பட்ட பார்வையில் இவ்வாறான படு மோசமான குற்றங்களை செய்யும் உள்ளங்களையும், நடத்தைகளை கொண்டவர்கள்தான்.
மானிட உள்ளங்களையும் உணர்வுகளையும் மதிப்பளித்து உண்மையோடு மானிட உறவுகளை வலுப்படுத்த எம்மை நாம் முதலில் மீள் திருத்தம் செய்துகொள்வோம்.
நான் சொல்வதில் மாற்றுக்கருத்துகள் இருப்பின் நீங்கள் முன்வைக்கலாம்.
"பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்" (அல்-குர்ஆன் 114:4)
No comments:
Post a Comment