மனசாட்சிசார் உணர்வியல் தீர்மானத்திற்கு தற்கவியல்சார் அறிவுடைமை வாதத்திற்கு இடையில் நடைபெறும் போராட்டத்தில் எமது தர்க்கம், உள்ளத்தின் உறுதியோடு மேலும் வலுசேர்ப்பதாக சமூகவியல் எதிர்காலம் தங்கி நிற்கின்றது.
அரசியல் அதிகாரம் என்பது குறித்த சமூகத்தின் எல்லாவித தளங்களிலும் தனது நேரடி தாக்கத்தையும், மறு தாக்கத்தையும் விளைவிக்கும் சக்தியையும் அந்தஸ்தையும் பெற்றுள்ளது.
இதனடிப்படையில்....
வாக்குரிமை என்ற உரிமை மற்றும் ஜனநாயக சுதந்திரம் என்பது வாயாளவில் பேசுபொருளே தவிர அது நடைமுறை ரீதியில் மூளைச்சலவை செய்யப்பட்ட விளம்பரப்படுத்தல் மற்றும் திணித்தல் இயல்பியலை கொண்டுள்ளது. இதனை நாம் வெளிப்படையாக உணரமுடியாவிட்டாலும் உண்மையும் அதுதான் என்பதனை உணர நீங்கள் உளவியல் தாண்டிய தர்கவியலுக்கு உங்கள் ஒப்பியல், பகுப்பாய்வு காரணிகளை முன்வைக்கவேண்டும்.
இன்று நான் ....
தடுமாற்றம் அடைந்த ஒரு வாக்குச்சாவடியை எதிர்கொள்கிறேன். தீர்மானம் எடுக்கும் சக்தியும், காரணங்களும் என் சூழலில் மலிந்து இருந்தபோதும்...
தர்க்கத்தை விட உணர்வியலுக்கு முன்னுரிமை அளிக்கும் சாதாரண மானுடன் போல் வெறுப்புடன் வாக்களிக்கும் நிலைக்கு நிர்பந்திக்கப்பட்டு ஆளாக்கப்பட்டுள்ளேன்.
இதுதான் #அரசியல்_முதலாளியமோ????
No comments:
Post a Comment