இஸ்லாம் ஏனைய சமயங்கள் மற்றும் நம்பிக்கை கோட்பாடுகளில் இருந்து தனித்துவமாய் தன்னை பரிணமித்து கொண்டது அது காண்பிக்கும் பன்மைத்துவம்.
அநேக இறையியல் கோட்பாடுகள் வெறுமனே அச்சத்தில் ஆன்மீகம் போதிக்கும் சித்தாந்தங்களை வெளிக்காட்டி நிற்கின்றது. குறிப்பாக கடவுளுக்கு பக்தன் தன்னை தியாகம் செய்தலோடு வரையறை செய்யப்படுகின்றது அவனது இறை நம்பிக்கை. இந்த நிலைபாட்டிற்கு முற்றிலும் முரணான வேதாந்தத்தை வழிகாட்டுகிறது இஸ்லாத்தின் பின்பற்றுதல், நடைமுறை ஒழுக்கவியல் மற்றும் இறையியல். மார்க்கத்தை பின்பற்றும் சுந்திரத்தை தற்கவியல் ரீதியாகவும் அறிவுடை ரீதியிலும் முடிவெடுக்கும் சுயாதீன தளத்தை வரையறை அற்று அளித்துள்ளமை அதன் நேர்த்தியான மாற்றும் உறுதியான கோட்பாட்டை நிரூபிப்பதாய் அமைகிறது.
பன்மைத்துவம் தொடர்பில் ஒரு நாட்டின் இறைமைக்கும் அரசியல் அமைப்பிற்கும் ஏற்றால்போல் தனது சட்டவியல் தொடக்கம் இறையியல் பின்பற்றுதலுக்கான சலுகைகள் வரை பரந்துபட்ட தளத்தை மாற்றீடாக அளித்து மனிதன் ஒருவன் இறைவனின் கேள்விக்கு மறுப்பு காரணம் சொல்லமுடியாத அளவிற்கு அதன் இயங்குநிலை காரணிகளை தந்துவிட்டது.
No comments:
Post a Comment