Mutur JMI

𝙅𝙪𝙣𝙖𝙞𝙙 𝙈𝙤𝙝𝙖𝙢𝙚𝙙 𝙄𝙝𝙨𝙝𝙖𝙣 𝐀𝐮𝐭𝐡𝐨𝐫 | 𝐏𝐮𝐛𝐥𝐢𝐬𝐡𝐞𝐫 | 𝐖𝐫𝐢𝐭𝐞𝐫 | 𝐅𝐫𝐞𝐞𝐥𝐚𝐧𝐜𝐞 𝐉𝐨𝐮𝐫𝐧𝐚𝐥𝐢𝐬𝐭 👉 𝙒𝙚𝙗𝙨𝙞𝙩𝙚 – www.jmi-mutur.com 👉 𝙈𝙖𝙞𝙡 – ihshanjm@gmail.com 👉 𝙁𝙖𝙘𝙚𝙗𝙤𝙤𝙠 – Ihshan J.M.I Mohamed - www.facebook.com/JMI.Ihshan 👉 𝙁𝙗 𝙥𝙖𝙜𝙚 Professional - Mutur JMI – www.facebook.com/IhshanJMI Personal - Ihshan JMI – www.facebook.com/MuturJMI 👉 𝙄𝙣𝙨𝙩𝙖𝙜𝙧𝙖𝙢 – Ihshan JMI - www.instagram.com/ihshan_jmi 👉 Contact 0771020030

Business

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, July 6, 2020

Nikola Tesla - நிகோலா டெஸ்லா

Image may contain: 1 personநீங்கள் எதிர்பார்க்கும் உலகில் மிகப்பெரியத் தாக்கத்தை ஏற்படுத்தியக் கண்டுபிடிப்பாளர் யார்? என்று கூறமுடியுமா?
Nikola Tesla
நாம் இன்று பயன்படுத்தும் அனைத்து நவீன அறிவியல் சாதனங்களிலும் இவர் கண்டுபிடித்த எதாவது ஒரு அடிப்படை பொருள் இருக்கும் பட்சத்தில் இவருடைய பெயரை மட்டும் யாரும் கண்டுகொள்ளாதது ஏன் என எப்போதும் எனக்கு ஒரு வருத்தம் உண்டு.அதுமட்டுமின்றி உலகின் பிரபல பத்திரிக்கை வெளியிடும் உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் கூட இவரது பெயர் இருக்காது.அந்த அளவிற்கு உலகத்தால் 'மறக்கடிக்கப்பட்ட அறிவியல் மேதை' ஆவார்.
ஒரு செர்பிய குடும்பத்தில் ஐந்து குழந்தைகளுள் ஒருவராகப் பிறந்த டெஸ்லா (1856) சிறுவயது முதலே மின்னியல் மற்றும் ஒளியியல் சார்ந்த விடயங்களில் ஈடுபாடு உடையவர். முழுமைக் கணிப்பு கணக்கீடுகளை மூளையை வைத்தே செய்துகாட்டி ஆசிரியர்களிடம் ஏமாற்றுக்காரன் என்ற பெயரை வாங்கியவர். எடிசனுக்கு உதவியாளாக சேர்ந்து அவருடைய மனோபாவம் பிடிக்காமல் பிரிந்தவர்.
1881-ல் தொலைபேசி குறலொலிப் பெருக்கி மூலம் தன்னுடைய கண்டுபிடிப்பு வாழ்க்கையைத் தொடங்கியவர். தன்னுடைய உழைப்பு திருடப்பட்டாலும் அதைப்பற்றி கவலைப்படாமல், எவரையும் வெறுத்து ஒதுக்காமல் வாழ்ந்த ஒரு மாமனிதன். Patent Right வைத்திருப்பவர்களைத்தான் இந்த உலகம் சிறந்த கண்டுபிடிப்பாளர்கள் என நம்புவதால்தான் இவரைப் போன்றவர்களை உலகம் மறந்தது.
Nikola Tesla Stock Pictures, Royalty-free Photos & Images
நவீன தலைமுறை கண்டுபிடிப்புகளில் டெஸ்லாவின் கருத்தியல் தவிர்த்து ஒரு கண்டுபிடிப்பு வருவது கடினம். உதாரணமாக மாறுதிசை மின்னோட்டத்தைக் (AC Current) கண்டுபிடித்து அறிவியல் துறையில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியவர்.இந்த கண்டுபிடிப்பின் தொடக்கத்தில் எடிசனால் இவருக்கு ஏற்பட்ட பிரச்சினைகளைத் தாண்டி இவருடைய கண்டுபிடிப்பை நிலை நிறுத்துவதற்கு இவர் மிகுந்த சிரமப்பட்டார். இது மட்டுமின்றி எக்ஸ் ரே இயந்திரத்தின் கண்டுபிடிப்பை நிக்கோலா டெஸ்லா கைவிட்டதற்கும் எடிசன்தான் காரணம்.

இது மட்டுமின்றி பல கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப் படுவதற்கு முன்பே இவர் வெற்றிகரமாக சோதனை செய்து பார்த்தவர். உதாரணமாக,
👉 ராடார் கருவி தயாரிப்பதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்னரே அதனை வெற்றிகரமாக நடத்திக் காட்டியவர்.
ராண்ட்ஜன் கண்டுபிடிப்பதற்கு 25 வருடங்களுக்கு முன்னரே எக்ஸ் ரே இயந்திரத்திற்கான அடிப்படை மாதிரியை உருவிக்கியவர்.
Nikola Tesla Built a Giant Tower to Send Wireless Electricity ...👉 மார்க்கோனி வானொலி கண்டுபிடிப்பதற்கு 30 வருடங்களுக்கு முன்னரே இவர் கண்டுபிடித்துவிட்டார். அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றத்தின் மூலம் வானொலியின் முதன்மை உரிமம் டெஸ்லாவுக்கு அளிக்கப்பட்டாலும் நோபல் பரிசு வாங்கியதன் விளைவாக மார்கோனிக்கே இந்த பெருமை சென்றடைந்துள்ளது.
👉 குளிரி தொழில்நுட்ப இயந்திரத்தை (Cryogenic Technology) கண்டுபிடிப்பதற்கு 50 வருடங்களுக்கு முன்னரே சோதனை செய்து பார்த்தவர்.
👉 தொலைக் கட்டுப்பாட்டு கருவியை முதன்முதலாக கண்டுபிடித்தவர்.
நயாகரா பவுன்டேஷன் உதவியுடன் முதன்முறையாக வெற்றிகரமாக ஒரு நீர் மின் உற்பத்தி நிலையத்தை உருவாக்கினார்.
மாறுதிசை மின்னோட்டத்துடன் வேலைசெய்யக்கூடிய Induction Motor ஐப் கண்டுபிடித்து எந்திரவியல் வரலாற்றில் முத்திரை பதித்தவர்.
👉 இப்போது நாம் அனைவரும் பயன்படுத்தும் மின்னனு சாதனங்களில் மூல அங்கமான Transister ன் அடிப்படை மாதிரியை 1889 -ல் உருவாக்கினார்.
இவை மட்டுமின்றி சில கண்டுபிடிப்புகளை ஒருசில பிரச்சனைகளின் காரணமாக பாதியிலேயே நிறுத்தியவர்.உதாரணமாக,
👉 கம்பியில்லா மின்‌பரிமாற்றம் : இப்போதும் சவாலாக இருக்கும் கம்பியில்லா மின்‌பரிமாற்றத்தை சோதனை செய்து பார்த்தவர்.
👉 நினைவுகளைப் படம்பிடிக்கும் ஒளிபடக் கருவி.
Nikola Tesla and the Wireless World: The Invention of Remote ...👉 செயற்கை அலை உருவாக்கம். வெடிபொருட்களை தந்தி மூலம் தூரத்திலிருந்தே வெடிக்க வைக்கும் முறையை கண்டுபிடித்தாலும் ஒனு சில நேரடி எதிர்ப்புகளால் கைவிட்டார்.
👉 கம்பியில்லா மின்சார இணைப்பின் மூலம் இயங்கக் கூடிய சூப்பர்சோனிக் வானூர்திகள்.
👉 தொலைவிலிருந்து கட்டுப்படுத்தக் கூடிய கப்பல்கள்.
👉 இது மட்டுமின்றி Earthquake machine, Death ray போன்ற பலவற்றின் ஆராய்ச்சியை பாதியிலையே விட்டுவிட்டார்.

இவ்வளவு சிறப்புமிக்க பல கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கத் தெரிந்தவர் தன்னுடைய கண்டுபிடிப்பிற்கு எப்படி காப்புரிமை பெறுவது? எப்படி பணம் சம்பாதிப்பது? என்று எடிசனைப் போல யோசிக்கத் தவறிவிட்டார். இவருடைய இந்த அறியாமையே வரலாற்றில் இவருடைய பக்கங்கள் எழுதப்படாததற்கு காரணமாகும்.
இப்படியெல்லாம் நடந்திருந்தாலும்,
Which Nikola Tesla Was Hotter: David Bowie in 'The Prestige' or ...
அமெரிக்காவின் பல மாகாணங்களில் இவருடைய பிறந்தநாளான ஜூலை 10 ஆம் தேதி டெஸ்லா தினமாகக் கொண்டாடப்படுகிறது. எலான் மஸ்க் தன்னுடைய கார் நிறுவனத்திற்கு டெஸ்லா என்ற பெயர் வைத்து இவரை பெருமைப் படுத்தியுள்ளார்.
காந்தப்புல அடர்த்திக்கான அடிப்படை அலகாக டெஸ்லா என்ற பெயர் பயன்படுத்தப் படுகிறது. கிறிஸ்டோபர் நோலன் தான் இயக்கிய 'The Prestige' திரைப்படத்தில் டெஸ்லாவின் கதாப்பாத்திரத்திற்கு முன்னுரிமை கொடுத்து பெருமைப் படுத்தியுள்ளார். இவருடைய பெயரில் ஒரு அருங்காட்சியகமும்,ஒரு விமான நிலையமும் செர்பியா தலைநகரம் பெல்கிரேடில் அமைந்துள்ளது.
இவ்வளவு பெருமைக்கு சொந்தக்காரரான டெஸ்லா தன்னுடைய இறுதிகாலத்தில் உணவுக்கு கூட பணமில்லாமல் பசியாலும் பட்டினியாலும் தனது 85 வது வயதில் இறந்தார்.அறிவியல் ஆராய்ச்சிக்காக திருமணம்கூட செய்யாமல் வாழ்ந்த டெஸ்லாவிடம் அவர் சாகும்போது இருந்தது 300 க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளின் Patent rights மட்டுமே.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages