Mutur JMI

𝙅𝙪𝙣𝙖𝙞𝙙 𝙈𝙤𝙝𝙖𝙢𝙚𝙙 𝙄𝙝𝙨𝙝𝙖𝙣 𝐀𝐮𝐭𝐡𝐨𝐫 | 𝐏𝐮𝐛𝐥𝐢𝐬𝐡𝐞𝐫 | 𝐖𝐫𝐢𝐭𝐞𝐫 | 𝐅𝐫𝐞𝐞𝐥𝐚𝐧𝐜𝐞 𝐉𝐨𝐮𝐫𝐧𝐚𝐥𝐢𝐬𝐭 👉 𝙒𝙚𝙗𝙨𝙞𝙩𝙚 – www.jmi-mutur.com 👉 𝙈𝙖𝙞𝙡 – ihshanjm@gmail.com 👉 𝙁𝙖𝙘𝙚𝙗𝙤𝙤𝙠 – Ihshan J.M.I Mohamed - www.facebook.com/JMI.Ihshan 👉 𝙁𝙗 𝙥𝙖𝙜𝙚 Professional - Mutur JMI – www.facebook.com/IhshanJMI Personal - Ihshan JMI – www.facebook.com/MuturJMI 👉 𝙄𝙣𝙨𝙩𝙖𝙜𝙧𝙖𝙢 – Ihshan JMI - www.instagram.com/ihshan_jmi 👉 Contact 0771020030

Business

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, July 11, 2020

பெண்களின் உடலின் எந்த பகுதியை ஆண்கள் முதலில் பார்க்கிறார்கள் ?

பாருங்களேன்... 
எமது உளவியல் கலாசாரத்தை.... 
ஒரு வினா கேட்பதும் சமூக அரங்கில் அவமானமாக நோக்கும் அளவிற்கு நாம் எமது நாகரீக கருத்தியலை மேம்படுத்தியுள்ளோம்... என்று நினைக்கிறேன்...)

2013 இல் ஒரு டிஸ்கவரி நிகழ்ச்சியில் இந்த கேள்விக்கான பதிலை பார்த்த நினைவுண்டு. அதனை சுருக்கமாக தருகிறேன். 

ஆண்கள், பெண்கள் இருவரும் உடலியல் மற்றும் உளவியல் கூறுகளில் வேறுபட்ட சித்தாந்தத்தை கொண்டுள்ளனர். இவ்வாறுதான் இயற்கை வடிவமைத்துள்ளது இந்த பிரபஞ்ச தொடர்ச்சியை சமநிலையில் பேன. பரிணாம வளர்ச்சியில் உயர்நிலையை அடைந்த மனிதன் ஏனைய உயிரியல் உலகத்திலிருந்து சற்று தன்னை பல இடங்களில் வேறுபடுத்திநிற்கிறான். இதில் குறிப்பாக பாலியல்/ இனவிருத்தி சார்ந்த தொடர்பு. 

எல்லா ஆண்கள் பெண்களை எப்போதும் (இரத்த உறவுமுறை தவிர்ந்த) காமத்து பொருளாகவே எண்ணுகிறார்கள். இதுதான் இயற்கையின் நாட்டமும். இதனால் ஆண்களின் பார்வையில் பெண்களும் புரத்தோற்ற உடலமைப்பு பெரிதும் முக்கியத்துவம் பெறுகிறது.
இதனால் ஆண்கள் பெண்களிடத்தில் தரவரிசைப்படி நோக்கும் பகுதிகள்.... 
1. மார்பகம் - 85% ஆண்களின் பார்வை முதலாவது பெண்ணின் மார்பகம் மேலே விழுகின்றது. பருமனில் பருத்த அளவில் ஆண்களுக்கு ரசனை வேறுபடுவதோடு அதனை கொண்டு பல தீர்மானங்களை ஆண்கள் எடுக்கிறார்கள் குறித்த பெண் தொடர்பில். (அந்த தீர்மானங்கள் குறித்து வேறொரு பதிவில் விரிவாக பார்ப்போம்)
2. பின்புறப்பகுதி - 12% ஆண்கள் பின்புற அழகை ரசிக்கிறார்கள். 
3. முகம் - வெறும் 3% ஆண்களே முகத்தை பார்த்து பெண்ணை எடைபோடுகிறார்கள். 

ஆனால் இதற்கு முற்றிலும் மாற்றமான நோக்குகையை பெண்கள் கொண்டுள்ளார்கள். பெண்கள் ஆண்களிடம் உடலியல் சார்ந்த எந்த கவர்ச்சியையும் எதிர்பார்ப்பதில்லை. அவர்கள் உளவியல் சார்ந்த எதிர்பார்ப்பை கொண்டுள்ளார்கள். அன்பு, பாதுகாப்பு, பராமரிப்பு, கண்ணியம் இப்படி... இருந்தபோதும் பெண்கள் ஆண்களின் நெஞ்சு, கை புயம், கால்களின் தன்மையை கொண்டு ஆணின் தன்மையை நோக்குகிறார்கள். 

அப்படியானால் ஆண்கள் எல்லோரும் தப்பானவர்கள் என்ற நிலைப்பாட்டிற்கு வந்துவிடாதீர்கள். ஏனெனில் இது இயற்கையின் வடிவமைப்பு. ஆண்கள் இவ்வாறுதான் இருப்பார்கள் என்று தெரிந்தும் திருமணத்தின் பின்னர் பெண்கள் தங்கள் கணவனை இன்னொரு பெண்ணை எதேர்ச்சையாக பார்ப்பதை கூட ஏற்றுக்கொள்கிறார் இல்லை. இதனை சரியாக புரிந்துகொண்டால் கணவன் மனைவி இல்லறம் சிறப்பாகிவிடும்... 

சரி இப்போது அறிவியல் சார்ந்த நிலைப்ப்பாட்டிற்கு வருவோம். 
Desmond Morris என்ற மிக சிறந்த ஆராய்ச்சியாளர் எழுதிய "Naked Ape" என்ற புத்தகத்தைப் படித்த பிறகுதான் எனக்கு இந்தக் கேள்விக்கான விடை மேலும் தெளிவாக கிடைத்தது!
Desmond Morris இன் கருத்துப்படி
"நாம் ஏப் என்னும் மனித குரங்குகளாக இருந்தவரை பின்புறமாக தான் புணர்ச்சி கொண்டிருந்தோம், பின்புறமாக புணர்வதால் பின்புறத்தை பார்ப்பதுதான் எல்லா குரங்குகளுக்கும் கவர்ச்சி. பின்புறம் பார்த்து இனக்கவர்ச்சி கொண்டு உடலுறவு கொள்ளும். பெண் குரங்குகளும் தனது பின்புறத்தை மிகவும் அழகாக வைத்துக் கொண்டு இனக் கவர்ச்சிக்கு அழைக்கும்.

ஆனால் காலப்போக்கில் மனிதன் இரண்டு கால்களும் எழுந்து நடக்க ஆரம்பித்த பிறகு புணர்ச்சி விதிகள் மாறின. மனித இனம் மட்டும் தான் முன்புறம் உறவுகொள்ள ஆரம்பித்தது. முன்புறத்தை பார்த்துதான் பொட்டன்ஷியல் மேட் எனப்படும் தகுந்த பார்ட்னரை தேர்ந்தெடுக்கும் வழக்கம் ஆரம்பித்தது. பெண் இனமும் ஒரு தகுந்த ஆண் துணையை கவர்ந்திழுக்க மார்பகத்தை பின்புறம் போலவே மாற்றியமைத்தது.

முன்புறம் மார்பகத்தைப் பார்த்து ஆண்களும் தகுந்த துணையை தேர்ந்தெடுக்க வசதியாக போனது. ஆனால் பின்புறமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதனால்தான் முன்னும் பின்னும் பெண்ணுக்கு மிகவும் அழகாக இருப்பது காரணம். இன நீட்டிப்பு காணும் இனக்கவர்ச்சி காகம் தான் இந்த மார்பகம் ஏற்பட்டது என்று டெஸ்மண்ட் மோரிஸ் ஆணித்தரமாக கூறுகிறார்.

அவர் பல்லாண்டுகளாக வந்த கருத்தை உடைத்து தெரிகிறார். அவர் சொல்லுகிறார் இது குழந்தைக்காக ஏற்பட்டது என்று கூறுவது, பிற்காலத்தில் ஏற்பட்ட நாகரீக கருத்தியல்! விஞ்ஞான கருத்து அன்று!
மேலும் தனது ஆராய்ச்சிக் கூற்று க்காக ஆதாரங்களையும் அடுக்குகிறார்! ஒரு மனித குரங்கு தன் குழந்தைக்கு எளிதாக பால் கொடுக்கிறது! முன்புறம் அதற்கு தட்டையான மார்பகம். ஒரு மனிதப் பெண் பால் கொடுக்கும் போது மிகவும் அசவுகரியம் அடைகிறாள். ஒரு கொரில்லாவின் குழந்தை எளிதாக பால் குடிக்கிறது. ஆனால் ஒரு மனிதக் குழந்தைக்கு பால் குடிக்கும் பொழுது பருத்த மார்பகம் மிகப் பெரிய தடையாக உள்ளது. அந்த குழந்தை மிகவும் சிரமப்பட்டு குடிக்கிறது. தாய் அடிக்கடி அதை சரி செய்து பால் கொடுக்க வேண்டியுள்ளது.

இத்தனைக்கும் காரணம் இனக் கவர்ச்சிக்காக ஒரு பருத்த மார்பகத்தை முன்னே மனித இனம் ஏற்படுத்திக் கொண்டது தான்! ஆகவே மார்பகத்தை பார்த்து இனக்கவர்ச்சி ஏற்படுவது இயற்கையின் விதி. குழந்தைக்கு பால் கொடுக்கும் இடத்தை மார்பகம் ஆக மாற்றியது மனிதனின் இரண்டு காலில் நின்று முன்புறமாக புணரும் இயற்கையின் பரிணாம வளர்ச்சிதான்! 

"சுவனத்தில் மனைவிகளாக மார்பகங்கள் உயர்ந்த, சம வயதுடைய கன்னிகைகளும் இருப்பர்"
(அல்-குர்ஆன் 78:33)

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages