குறிப்பாக சமகால சூழலில் ஒரு பிரதேச செயலகத்தில் காணப்படும் ஒவ்வொரு கிராமசேவகர் பிரிவிற்கும் தனித்துவமான தேவைகள் முன்னுரிமைப்படுத்தப்படுகின்றது. ஆனால் அரசியல் காலங்களில் பேசுபொருளாக பொதுவான பிரச்சினைகளும் நாடளாவிய ரீதியான ஆலோசனைகளுமே முன்வைக்கப்படுகின்றது. இதனால் குறிப்பிட்ட மக்கள் வாழும் குறித்த பிரதேசத்தின் தனித்துவ தேவைகள் மற்றும் பிரச்சினைகள் தீர்வு அளிக்கப்படாமல் நீடித்த வண்ணமே உள்ளது.
இவ்வாறான நடைமுறை சிக்கல்களுக்கு கிராம ரீதியிலான "Intellectual Group" சிறந்ததொரு மாற்றீடாகும். இதில் அனுபவம் வாய்ந்த ஓய்வுபெற்ற அரச ஊழியர்கள், சமகால உயர்நிலை உத்தியோகத்தர்கள், மதத்தலைவர்கள் மற்றும் பல்கலைக்கழக பட்டதாரிகள் என்று பல்வகை மனித ஆளுமைகளை குவிப்பு செய்யவேண்டும்.
பொதுவாக எந்த துறையை எடுத்தாலும் அரசியல் ரீதியிலான பின்னணி விசைகள் வெளிப்படும். அவ்வாறான ஒரு சூழலை எக்காரணம் கொண்டும் இவ்வாறு தோற்றுவிக்கப்படும் குழுக்கள் இடமளித்துவிடக்கூடாது.
இவ்வாறு ஒவ்வொரு பிரதேச ரீதியிலும் தோற்றுவிக்கப்பட்ட பொதுக்குழு ஒட்டுமொத்த சமூகத்தையும் பிரதிபலிக்கும் தலைமைத்துவ சபை / சூராசபை / அதிகார மேற்சபை என்ற கட்டுமானத்தின் ஒரு பிரதேச கிளை பங்காளராக இணைப்பு செய்யப்படவேண்டும். இவ்வாறான கட்டமைப்பு ஒட்டுமொத்த குறைப்பாடுகளையும் அதற்கான திட்ட வியூகங்களை வரைந்து அதற்கான வாய்ப்பு, வசதிகளை பெற்றுக்கொள்ளும் மூலங்களை அடையாளம் கண்டு தீர்வுகாணும் நிலையை அடைய எத்தனிக்க வேண்டும்.
ஆரம்பத்தில் இது ஒரு எளிமையான பொறிமுறையாக (Simple Process) இருந்தபோதும் இதனூடாக அடைந்துகொள்ள மற்றும் ஏற்படுத்தும் தாக்கம் (Social Impact) காலவோட்டத்தில் அளப்பரியது.
No comments:
Post a Comment