சூரியனைவிட 4~5 மடங்கு திண்மம் வாய்ந்த பெருநட்சத்திரம் ஒன்று அணு இணைவு மூலம் எரிந்து முடிந்து சுபர்நொவாவாக (Supernova) வெடித்துச் சிதறும்போது எஞ்சியிருக்குக் கருவை நாம் நியூட்ரோன் நட்சத்திரம் என்கிறோம். வெடிப்பின் போது இவ்வாறு 90% எடையும் எரிந்து முடிக்கப்பட எஞ்சியிருக்கும் 10% எடையாகிய புரொட்டோன்களூம் (Hydrogen ion) எலெக்ட்ரோன்களூம் இணந்து நியூட்ரோன்களைத் தருகின்றன. இவை தொடர்ந்தும் அணு இணைவு மூலம் எரிக்கப்பட முடியாதவை.

வெடித்த சுபர்நோவாவிலிருந்து நியூட்ரோன் நட்சத்திரத்துக்கு மாற்றப்பட்ட அதிர்வலை ஆற்றல் காரணமாக அது சுழல ஆரம்பிக்கின்றது. இவ்வாறான சுழல்வு நிமிடத்துக்கு 700 தடவைகள் வரை போகலாம். என்பது மட்டுமன்றி இவை மிகவும் துல்லியமான சுழல்வுகள் என்பதனால் எதிர்காலத்தில் விண்வெளியில் நேரம் பார்ப்பதற்கு சீசியம் அணுவின் அதிர்வுகளைப் பயன்படுத்தாமல் நியூட்ரோன் சுழல்வுகளைப் பயன்படுத்தலாம் என்று இயற்பிய்லாளர்கள் இப்போது எண்ணுகிறார்கள். இவை இவ்வாறு சுழல்வதனால் உருவாகும் இவற்றின் ஆற்றல்மிக்க காந்த மண்டலங்கள் அண்டத்துள் வெகு பிரகாசமான ஒளிக் கற்றைகளை வீசுகின்றன.

இந்த நட்சத்திரம் ஒன்றின் மீது நீங்கள் உணரும் ஈர்ப்பு விசை பூமியினதைப் போல் 2 பில்லியன் மடங்குகளாகும். இதன் காந்தமண்டலத்தின் பலம் பூமியின் காந்த மண்டலத்தைப்போல் 3 ட்ரில்லியன் (300 கோடி) மடங்காகும்.
இன்னும் பெரிய வேடிக்கை என்னெவெனில் இப்படியான சில நியூட்ரோன் நட்சத்திரங்களில் இதனை விடவும் ஆயிரம் மடங்கு பலமான காந்தமண்டலங்களுள. இந்த வகை நியூட்ரோன் நட்சத்திரங்களை மக்னெற்ரார் (Magnetar) என்கிறோம். இப்படியான மக்னெற்ரார்களிம் பூமி நடுக்கம்போல் நட்சத்திரநடுக்கம் (Star-quake) ஏற்படுவதுண்டு அப்போது வெளிவிடப்படும் சக்தி அளப்பரியது. ஒரு விநாடியின் பத்திலொரு பங்கில் இவ்விதம் வெளிவிடப்படும் ஆற்றலானது எமது சூரியன் 100,000 ஆண்டுகளில் வெளிவிடும் ஆற்றலை விடவும் மிக அதிகமாகும்.
இதுவரை நாமறிந்த பெரியதும் அடர்ந்ததுமான நியூட்ரோன் நடசத்திரம் எமது சூரியனப்போல் 2.14 மடங்கு எடையானது அதன் விட்டம் வெறும் 20 கிலோமீட்டர்கள் தான், இது தான் ஒரு நியூட்ரோன் விண்மீன் சமாளித்து நிலைக்கக்கூடிய அதிக பட்சக் கீழெல்லை அதன் பின்னர் அது ஒரு கருந்துளையாகிவிடும்.
சிலசமயங்களில் ஒன்றை ஒன்று சுற்றிவரும் இரு நியூட்ரோன் விண்மீன்கள் ஒன்றை ஒன்று மோத நேர்ந்தால் பயங்கரமான அளவு ஆற்றல் வெளிப்பாட்டுடன் அவை இணையும் இந்த நேரங்களிற் கருந்துளையொன்றும் உருவாகலாம். மாறாகப் பிளாட்டினம் தங்கம் யூரேனியம் போன்ற பாரமான தனிமங்களும் உருவாக்கப்பட்டுத் தூசிகள் வாயுக்களுடன் அண்டைவெளீயுள் வீசப்படலாம். இவ்வாறு ISM (Inter Stellar Medium) உள்ளே வீசப்பட்ட முகில்கள் நம்முடைய சூரியமண்டலப்பக்கம் வந்தால் அதனைத் தன்னந் தனியனாகக் கையாள முயலாதீர்கள். எனக்கும் சொல்லி வையுங்கள்.
நட்சத்திரங்கள் ஒளியிழந்து உதிர்ந்து விழும்போது (அல்குர்ஆன் 81:2, 82:2)
No comments:
Post a Comment