
1. சோலார் நெபியுலா
2. விண்கல் மோதல்கள்
மேலே கூறப்பட்ட காரணங்களுள் ஏதாவது ஒன்றுதான் பூமியில் நீர் வந்ததற்கு காரணம் என அறிவியலாளர்கள் கணிக்கிறார்கள் (இரண்டு காரணங்களும் இருப்பதற்கு கூட வாய்ப்புண்டு).
சோலார் நெபியுலா
இந்தக் கருத்திற்கான விளக்கத்தைப் பெற சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்வைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் (அதாவது சூரிய குடும்பத்தின் தோற்றம் பற்றி) . சூரிய குடும்பம் உருவாகும் போது சூரிய குடும்பத்தை சுற்றி வாயுக்களாலும் தூசுகளாலும் ஒரு மிகப்பெரிய மேகக் கூட்டம் சூழ்ந்து இருந்தது. இந்த மேகக்கூட்டமே சோலார் நெபியுலா (Solar Nebula) என்றழைக்கப்படுகிறது. அந்த மேகக்கூட்டத்தில் அதிக அளவில் ஹைட்ரஜன் அணுவும் ஆக்சிஜன் அணுவும் இருந்தன.

இந்த நிகழ்வு பல மில்லியன் ஆண்டுகளுக்கு நிகழ்ந்து பூமியின் மேற்பரப்பு வெப்பம் நன்கு குறையவும் நீர் மூலக்கூறுகள் நிலையான திரவத்தன்மை பெற்றன. இந்த நிகழ்வின் தொடக்கத்தில் உருவான அந்த மேகக் கூட்டத்தில் உருவான நீர் மூலக்கூறுகளை கொண்டு இந்த பூமியின் பெருங்கடல்களை 3 மில்லியன் முறைக்கு மேல் நிரப்ப முடியுமாம்.
விண்கல் வீழ்ச்சி
பூமியில் நீர் எப்படி உருவானது என்பதைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கிய நாசாவிற்கு நம்பும் அளவிற்கு உள்ள காரணமாக தென்பட்டது விண்கல் தாக்குதல் அல்லது சிறுகோள் வெடிப்பு (Asteroid Bombardment) என்ற கருத்தே ஆகும்.

மேலே கூறப்பட்ட இரண்டு காரணங்களுள் எரிகல் வீழ்ச்சியே பல வகைகளில் நம்பகத் தன்மை கொண்ட காரணமாகக் கருதப்படுகிறது. ஏனெனில் பூமியின் பெருங்கடல்களில் உள்ள நீரின் டியூட்டிரியம் - ஹைட்ரஜன் விகிதமானது (D/H ratio) எரிகற்களில் காணப்படும் D/H விகிதத்துடனே ஒத்தப்போகிறது.பூமியில் உள்ள நீரில் சோலார் நெபியுலாவின் தாக்கம் 1%–2% இருக்கலாம் என கருதப்படுகிறது.
ஆனால் இன்னும் இதற்கான துல்லியமான விடை கிடைக்கப் பெறாததால் ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது.

அதன் உப்பு எங்கிருந்து வந்தது?
பூமி உருவான தொடக்கத்தில் பூமியின் மேற்பரப்பு முழுவதும் அதிக அளவில் குளோரைடும் சோடியமும் பரவி காணப்பட்டன. பின்பு பூமிக்கு வந்த நீர் மூலக்கூறுகள் சோடியம் குளோரைடை உயரமான இடங்களிலிருந்து தாழ்வான இடத்திற்கு கடத்திச் சென்று படிய வைத்தது. இந்த நிகழ்வு மீண்டும் மீண்டும் 200 முதல் 300 மில்லியன் ஆண்டுகளுக்கு நடந்ததால் பூமியின் உயரமான பரப்பிலிருந்து அனைத்து சோடியம் குளோரைடு மூலக்கூறுகளும் தாழ்வான பகுதியில வந்து படிந்தன. இப்படியாக பூமியின் பெருங்கடல்கள் உப்புத் தன்மை கொண்டவைகளாக மாறின.
இதற்கு ஆதாரமாக அதிக நீரோட்டம் கொண்ட பெருங்கடல்களில் உள்ள உப்புத்தன்மையை விட நால்புறமும் நிலத்தால் சூழப்பட்டு தேங்கியுள்ள கடல்கள் அதிக உப்புத்தன்மை கொண்டவைகளாக உள்ளன (உதா. சாக்கடல் - Dead sea). ஒருவேளை கடலானது உவர்ப்பாக இல்லையென்றால் இந்த பூமியே உப்பாகத்தான் இருந்திருக்கும்.
No comments:
Post a Comment