அதற்கான சந்தர்ப்பங்கள் அண்மைகாலங்களில் தொடர்ச்சியாக பரவலாக்கம் செய்யப்பட்டு சமத்துவ சந்தர்ப்ப வாயல்கள் திறந்தவண்ணம் உள்ளது. ஆனாலும் வெளியில் இருந்து விமர்சனம் செய்வதைவிட உள்ளிருந்து விமர்சனம் செய்வது எம்மை நாமே பட்டை தீட்டி பளிச்சிட வாய்ப்பளிக்கலாம். அதுமட்டுமன்றி புதிதாக தங்களை சமூகப்பணியில் ஈடுபட எத்தனிக்கும் இளம் தலைமுறையைக்கூட சில மறை கண்ணோட்ட விமர்சனங்கள் விரக்தியடையச் செய்துவிடக்கூடும்.
தனிப்பட்ட ரீதியில் மறைமுகமாக சமூகப்பணி செய்யும் எவரும் விமர்சனம் என்ற பெயரில் ஒருவரின் சமூக அர்ப்பணிப்பை அவமானப்படுத்தவோ அசிங்கப்படுத்தவோ முனையமாட்டார். ஏனெனில் அவருக்கு தெரியும் சமூக பங்குபற்றுதலில் உள்ள கஷ்டமான இடர்பாடுகள் மற்றும் மறை கண்ணோட்ட ஊடுருவல்கள்.
எனவே எம்மால் முடிந்ததை அன்பளிப்போம். அது
அகத்தின் அறிவினால்...
ஆன்மாவின் ஆசிர்வாதத்தினால்...
உடலின் உழைப்பினால்...
”முனாஃபிக்கானவர்கள் முஃமின்களில் தாராளமாக தர்மம் செய்பவர்களையும் வேறு பொருள் எதுவுமில்லாததால் தங்கள் உழைப்பை தானமாகக் கொடுப்பவர்களையும் குறை கூறி, ஏளனமும் செய்கிறார்கள்” (அல்குர்ஆன் 9:79)
No comments:
Post a Comment