
குறிப்பாக தொடர்ச்சியாக மீள் எழுகை பெறமுடியாத அனர்த்தங்களுக்கு உள்ளாக்கிய நாம் யுத்த வெற்றியின் பிற்பாடு பாரியதொரு சமூகவியல் சார் எழுச்சியை நோக்கி நகர ஆரம்பித்தோம். அத்தோடு ஆரம்பகாலங்களில் எமது வளர்ச்சியில் பெரிதும் தாக்கம் செலுத்திய ஒரு காரணியே உட்கட்டமைப்பு வசதி மற்றும் வெளித்தொடர்பு உரையாடல்கள். குறித்த இரண்டில் துறைசார் நிபுணர்களின் உற்பத்தி வீதம் குறைவானதும், போக்குவரத்து ரீதியாக எதிர்கொண்ட சவால்கள் வெளியூர்கள் இடத்திலான தொடர்பாடல் சிக்கலுக்கும் வழிகோலியது.
எவ்வாறு இருந்தபோதும் கடந்த பத்து ஆண்டு கால வரலாற்றில் எமது ஊரில் ஏற்பட்டுள்ள மற்றும் ஏற்படுத்தப்பட்டுள்ள மானிடவியல் அபிவிருத்தி தொடர்பான மற்றும் சமூகவியல் ரீதியான தூரநோக்கு கொண்டு நிலைபேறான அபிவிருத்தி திட்டம் மற்றும் மானிடக்கட்டமைப்பு போன்ற விடயதானங்கள் எந்த அளவில் சீரமைப்புக்கப்பட்டு வலுசேர்க்கப்பட்டுள்ளது என்பது தொடர்பான வினாவிற்கு எமது தலைபீட நிர்வாக அலகுகளின் இயக்கப்பாட்டியலே சிறந்ததொரு விடையாக கிடைத்துவிடும்.
நாம் ஏனைய ஊர்களை காட்டிலும் பல வருடங்கள் பின்தங்கிய மானிதவள பயன்பாடு மற்றும் முகாமைத்துவத்தில் தொழிற்பட்டு வருகிறோம் என்பதே உண்மை. இந்த கட்டமைப்பியல் ரீதியான வலுவற்ற நிலையினை நிவர்த்திக்கும் வகையிலான மறுசீரமைப்பு புத்தாக்க சிந்தனை உருவாக்கத்தையும் அதற்கான தூண்டுதலையும் ஆளுமை, அறிவுசார் மற்றும் துறைசார் நிபுணர்களின் ஒருமிப்பு குறித்து மிக அவசரமாக முடிவெடுக்கவேண்டிய இக்கட்டான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
தொடர்ந்துவரும் காலங்களில் எமது அடுத்த தலைமுறை எதிர்நோக்கவிருக்கும் தேசிய நீரோட்ட அரசியல், பொருளாதார மற்றும் ஆன்மீக ரீதியான நெடுக்கடிக்கு முகம்கொடுக்கும் வழிகாட்டல்களையும் தாயாரிப்புகளையும் உணர்ச்சி, சிந்தனை இன்னும் செயற்திறன் ரீதியாக வழங்கும் தகுதிவாய்ந்த சமூக கட்டமைப்பு தலைமைபீடத்தை தோற்றுவிக்க முயற்சிப்போம்...
No comments:
Post a Comment