“எவரொருவர் பரிசுத்த இருதயத்தை அல்லாஹ்விடம் கொண்டு வருகிறாரோ அவர் கண்ணியம் அடைவார்” (அல்-குர்ஆன் 26:89)
மேற்படி புனித வேதத்தின் வசனத்தின்படி....
கண்ணியம் என்பது இறை திருப்தியில் முழுமை பெறுவதாகும். எமது அன்றாட வாழ்வியல் பணியில் பல மானிடர்களுடன் தொடர்பாடுகிறோம். இதன் காரணமாக ஒவ்வொரு மனிதனும் நம் மீது கொண்டுள்ள பார்வை என்பது பல்வகைப்படுவது இயற்கைதான். இந்த இயற்கை அமைப்பியலை புரிந்துகொண்ட இறைவனின் திருப்தியை நாடி செய்யப்படும் பணிகளில்தான் நாம் கண்ணியம் அடைகிறோம். ஆனால் இந்த கண்ணியத்தை பரிசுத்தமான உள்ளம் கொண்டவர்களே அடைந்துகொள்கின்றார்கள் என்பது அல்குர்ஆனிய போதனை.
விமர்சனங்கள் எப்போதுமே எமக்கு இருந்துகொண்டிருக்க வேண்டிய முக்கிய ஒரு காரணியாகும். இதனால்தான் எமது சிந்தனை, செயற்திறன் திறன்பட வெளிப்படுத்தப்பட வாய்ப்பாகும். தனிநபர் விமர்சனங்கள் தாண்டிய சமூக விமர்சனங்களே நாம் அவதானிப்பு கொள்ளவேண்டியது. திருப்திப்படுத்தல் என்பது ஒரு சாதாரண விடயமன்று.
எம்மால் இயன்றதை அளிப்போம். திருப்தியை இறைவனிடத்தில் எதிர்பார்ப்போம்.
"அத்தகையோரின் உள்ளங்களில் இருப்பவற்றை அல்லாஹ் நன்கு அறிவான் - ஆகவே நீர் அவர்களிடமிருந்து விலகியிரும், அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யும்; மேலும், அவர்களின் மனங்களில் பதியும்படி தெளிவான வார்த்தைகளைக் கூறும்" (அல்-குர்ஆன் 4:63)
No comments:
Post a Comment