
ஜனநாயக விதிமுறைகள் எப்போதும் ஆயுட்கால அதிகாரப் பரம்பலைத் தாண்டிய கட்டமைப்பிற்குள் வரையறை செய்யப்படுகின்றது. இதனால்தான் சமத்துவம், உரிமைகள், சலுகைகள் மற்றும் ஆளுமை விருத்தி பண்பியல்புகள் பரவலாக்கம் செய்யப்பட வாய்ப்பளிக்கப்படுகின்றது.
ஒரு குழு, அமைப்பு, குடித்தொகை மற்றும் சாரார் சார்ந்த நிர்வாக அதிகாரங்கள் எப்போதும் நிலைமாறும் சுழற்சிமுறை போக்கை காண்பிக்கும் போது புத்தாக்க சிந்தனைக்கும் செயற்பாட்டிற்கும் வழிகோலும். அத்தோடு காலவோட்டத்தின் சமூகவியல் நீரோட்டதிற்கும் அதனை சார்ந்த மேட்டுக்குடிகளின் வழிநடத்துகை சாத்தியப்பாடாக அமையும்.
எப்போது ஒரு சமூகம் தன்னை நிர்வகிக்கும் ஆன்மிகம், அரசியல் மற்றும் மானிட தலைமை பீடங்களில் அதிர்ப்தி கொண்டு தனது மீள் கேள்விகள், கோசங்கள் இன்னும் எதிர்வினைகளை ஆற்ற முட்படுமோ அப்போது அச்சமூகம் தனக்கான சிறந்த தலைமைப் பொறுப்பை ஒப்படைக்கும் அடையாளப்படுத்துகையை நோக்கி நகர்கின்றது எனலாம்...
இந்த எடுகோளோடு நிலைமாறும் சூழல் கட்டமைப்பில் இயங்கும் எந்தவொரு சமூகம் சார் அமைப்புகளாக இருக்கட்டும் அரசியல் அதிகாரங்களாக இருக்கட்டும் அதன் தனி அலகுகள் ஆயுட்கால தலைமை பீடத்தை ஆதரிப்பதை முற்றாக மறுதளிப்பு செய்தல் முக்கிய பங்கினை பெற்றுக்கொள்ளும். அவ்வாறு இல்லையேல் மிக மோசமான சமூக பின்னடைவையும், மானிட வள முகாமைத்துவ பிறழ்வுகளையும் முகங்கொடுக்க நேரிடுவதோடு எதிர்கால தலைமுறையினை அடிமை சாசனத்தை ஒப்புவிக்கும் கையொப்பத்தை நிகழ்கால சூழலில் வாழும் குறித்த சமூகக் கட்டமைப்பின் அங்கங்கள் துணைபோவதை மறுக்கமுடியாது...
No comments:
Post a Comment