
ஒருமித்த இலக்குகள் கொண்ட ஒரே சமூகத்தில் வாழும் நபர்களினால் இலகுவாக ஒரு புள்ளியில் சந்தித்து அதனூடாக செயலாற்றுவத்தில் எந்தவித தடங்கலும் ஏற்படாது என்பதுவே இயற்கையின் வழிமுறை. இதுவொரு ஈர்ப்பு சார்ந்த இயற்கை அமைப்பியல். பிரபஞ்ச இயக்கம் தொடக்கம் சாதாரண நுண்ணங்கி வாழ்வியல் முறைமை வரை இந்த ஒழுக்காற்று நடைமுறையை பின்பற்றப்படும் வரையரையாக எடுக்கப்படுகின்றது.
மானிட சமூகத்தின் சமுதாய வாழ்வியல் முறை மற்றும் ஆளிடைத்தொடர்புடமை என்பன சிக்கல் நிறைந்த பின்னிப்பினைந்த வலையமைப்பாகும். இங்கே ஒவ்வொரு இலக்குகள், நோக்கங்கள் என்பன அந்த குழு அல்லது சாரார் சார்ந்துள்ள மனித தனியன்களின் ஒருமித்த தேவை, எண்ணம் சார்ந்ததாக பிரதிபலிக்கும் போக்கை உடையதாகும். ஒவ்வொரு குழுவும் அதன் சுயாதீன பாதையில் அதன் இலக்கை நோக்கி முன்னோக்கி செல்லும். இந்த அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் இடையில் காணப்படும் ஒத்த கருத்துக்கள், சிந்தனைகள் மற்றும் செயற்பாட்டு பண்புகள் என்பன ஒரு தளத்தில் குவிக்கப்பட்டு அவை துறைசார் அங்கத்தவர்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்ட பகிர்ந்தளிப்பு செய்யப்படுவதில்தான் ஒட்டுமொத்த சமுதாய அடைவுகளும் ஒழுங்கமைப்புக்குள் சீரமைக்கப்படும்.
ஒரே இலக்குகள் கொண்ட மனித வளங்களை அடையாளம் காண்பது, அவர்களுக்கான சந்தர்ப்பம், வாய்ப்பு மற்றும் வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பது தொடர்பில் நாம் கொண்டுள்ள முரண்பாட்டியில் சிந்தனைப் போக்கு காரணமாகவே எமது சமூகத்தில் சமுதாய பணிகளில் பலரின் பங்களிப்பை வெளிப்படையாக நுகரமுடியாது போகின்றது. அத்தோடு ஒரு சில அடையாளப்படுத்தப்பட்ட மனித வளங்களில் சமூக பொறுப்புடமைகள் மீள் சுழற்சி அடைவதையும் காணக்கூடியதாக உள்ளது.
கட்டமைப்பு ஒழுங்குமுறைப்படுத்தல் என்ற பாரியதொரு மனித முகாமைத்துவ வேலைத்திட்டம் பற்றி நாம் மீள் வாசிப்பு செய்யவேண்டிய காலகட்டத்தை எட்டியுள்ளோம் என்பதை அடிக்கடி எமது சமூக நடைமுறை வாழ்வியல் கோலங்களில் காணப்படும் ஓட்டை ஒடிசல்கள் அப்பட்டமாக எமக்கு கற்பிக்கின்றது.
No comments:
Post a Comment