
சுயநலங்களுக்காக சமூகத்தை அடிமை சாசனத்தில் கைசாத்திடும் இவ்வாறான மனித வளங்களை கண்டும் காணாமல் கடந்துசெல்லும் சமூக ஆளுமைகள் மற்றும் அனுபவசாலிகளின் மௌனமே கேள்விற்கு உட்படுத்தப்படவேண்டிய மற்றும் தண்டிக்கப்படவேண்டிய விடயதானம்.
குறிப்பாக துறைசார் வல்லுநர்கள், பல்கலைக்கழக பட்டதாரிகள், தொழிற்கல்வி பயிலுணர்கள் மற்றும் தொழிநுட்ப, அறிவியல் கல்வியூட்டல் பின்புலம் கொண்ட பல்லின சமூக ஆளுமைகளுடன் ஒன்றிணைவு செய்யப்படாத அரசியலின் விளைவுகளே நல்ல அரசியல் ஆளுமைகளை எம்மால் அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் இன்றளவும் தேடிக்கொண்டு இருக்கிறோம்.
அரசியலில் ஆர்வம்காட்டும் இளம் தலைமுறையினரின் பிரவேசம் இன்றுள்ள இருண்ட அரசியல் கட்டமைப்பை மீள் கட்டுமானம் செய்து புதுப்பிக்க முடியுமான ஒரு தீர்வாகும். கட்சிகள் என்ற மாயை வலையில் சிக்குண்டு சில அரசியல் ஆர்வளர்களினால் பங்கீட்டு அரசியல் மற்றும் மாற்றீடு அரசியல் கலாசாரத்திற்கு ஆதரவளிக்க முடியாதுதான். என்றாலும் முயற்சிகள் முதலீடாக கொண்டு ஒரு சாராரின் அர்பணிப்பான சமூக சிந்தனையே எதிர்கால பாரிய சமூகவியல் சவால்களுக்கு மூலதனமாக மாறும் என்பது இன்று பல மட்டங்களில் மீடிரனாக உணர்த்தப்படும் எதார்த்தமாகும்.
No comments:
Post a Comment