அனேகமாக மனித நடத்தைகள் மற்றும் உளவியல் பண்புகள் தன்நலத்தோடு சமூகப்பிரபலம் சார்ந்த அடிப்படை எதிர்பார்ப்பை கொண்டுள்ளது. இந்த எதிர்பார்ப்புகள் பொதுவாக பதவிநிலை அந்தஸ்தை நோக்காகக்கொண்ட சமூக பொதுப்புத்தி அடையாளமாகும். இந்த ஒரு காரணத்தினால் அநேக சமூக அமைப்புகளின் ஆரோக்கியமான செயற்பாட்டு வினைத்திறன் மக்களவை பிரயோகம் செய்யப்படாத சூழ்நிலை உருவாகின்றது.
இன்னும் சில சமூக அமைப்புகளில் நிர்வாகத்தில் அங்கத்துவம் வகிக்கும் ஒருசில நபர்களின் தியாகத்தினால் அந்த அமைப்பின் சில வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது. இருந்தபோதும் அதனை முகாமைத்துவம் செய்யும் விதத்தில் விடுகின்ற தவறுகளினால் அவ்வாறான சில அர்பணிப்புகள் கூட இல்லாதுபோகும் நிலைதான் அதிகமதிகம்.
சமூக அமைப்புகளில் குறிப்பாக புதிய தலைமுறையினரை உள்வாங்கி அவர்களுக்கான பொறுப்புகள் உரிமைகள், கடமை மற்றும் அதிகார அந்தஸ்தை அளிக்கும் வகையிலான மனிதவள முகாமைத்துவம் புதிய இளம் அங்கத்தவர்களுக்கான ஆர்வத்தையும், ஆளுமை விருத்தியையும் குறிப்பாக சமூக பொருப்புடமையையும் உணர்த்தி சமூக பற்றுதலை வளர்த்தெடுக்கும்.
இந்த நடைமுறை பின்பற்றுதல் சிறந்த இளம் ஆளுமை மானிடவியல் உருவாக்கத்திற்கு பங்களிப்பு செய்வதோடு சமூகத்தில் அடுத்த தலைமுறையின் வகிபாகத்தையும் உறுதி செய்வதாக அமையும்.
No comments:
Post a Comment