
அதற்கு முன், துருவங்கள் (Poles) என்றால் என்னவென்று பார்த்து விடுவோம். நம் பூமிக்கு வடதுருவம், தென்துருவம் என்று இருக்கின்றன. ஆனால், கீழ்துருவம் (கிழக்கு துருவம்), மேல்துருவம் (மேற்கு துருவம்) என்று இல்லை.
கிழக்கும் மேற்கும் திசைகள். வடக்கும் தெற்கும் திசைகள்தான் என்றாலும், பூமியின் சுழற்சி அச்சு (Spinning Axis) செங்குத்தாக வடக்கு தெற்கில் அமைந்துள்ளதால், அவற்றைத் துருவங்கள் என்றும் சொல்கிறோம்.
நம்மால் ஒரு குறிப்பிட்ட இடத்தை வடதுருவம் என்றோ, தென் துருவம் என்றோ வரைவிட முடியும். ஆனால், கிழக்கு துருவம், மேற்கு துருவம் என்று எந்த ஒரு இடத்தையும் குறிக்க முடியாது. சுழன்று கொண்டே இருக்கும்.
அடுத்து, மின்னோட்டம் இருக்கும் இடத்தில் காந்தப்புலம் உருவாகும் என்பதும் நமக்குத் தெரியும். நம் புவியே ஒரு காந்தம் போன்றதுதான். புவியின் நடுப்பகுதியில் இருந்து வெளிப்பக்கமாக நகரும் மின்னிகள் காரணமாக ஒரு மின்னோட்டம் அதற்குச் செங்குத்தாக புவி சுழலும் திசையில் ஏற்படும். இவ்விரண்டிற்கும் செங்குத்தாக காந்தப்புலம் தென்வட துருவங்கள் நோக்கி உருவாகும். இதனை ஃப்ளெமிங்கின் வலக்கை விதி கொண்டு விளக்கலாம்.
ஆக, புவி சுழற்சி காரணமாக ஏற்படும் மின்தூண்டல் விளைவிக்கும் காந்தப்புலம் துருவங்களை நோக்கியே பாயும். காரணங்கள், புவி சுழற்சி, துருவங்கள் சுழற்சி அச்சில் அமைந்துள்ளமை, ஃப்ளெமிங்கின் வலக்கை விதி.
மேலதிக தகவல்
சூரியனிலிருந்து வரும் ஆற்றல் மிக்க மின்னேற்றப்பட்ட சூரிய புயல் மற்றும் துகளிகளிடமிருந்து புவிக்காந்தப்புலமே காக்கின்றது. வான் ஆலன் கதிர்வீச்சுப் பட்டையும் ( புவிக் காந்தப்புல எதிர் மின்னேற்றத்துகள்களால் பேரண்டத்திலிருந்து வரும் அண்டக் கதிர்வீச்சுகளை தாக்குவாதல் உருவாகும் பட்டை) சற்று சூரியக் காற்று துகள்களை தடுத்தாலும் புவி தன்னுடைய காந்தப் புலத்தாலே பெருமளவு தற்காத்துக் கொள்கின்றது. மேலும் சூரியக் காற்று அதிகமாக உள்ள தருணங்களில் புவிகாந்தப்புலம் துருவப்பகுதியில் அதிர்வை ஏற்படுத்துகின்றது.
No comments:
Post a Comment