எம்மோடு உறவாடும் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்கள் என்று நாம் ஒரு மனித தொடர்புடைமை சங்கிலி மற்றும் வலைப்பின்னலில் சமுதாய வாழ்வியல் முறைமையை நிலைநாட்டிக்கொண்டு இருக்கிறோம். இந்த சூழலில் நாம் உறவாடும் மனித தனியன்கள் ஏதோவொரு சிறு பிரதிபலனை எதிர்பார்ப்பது மனித இயல்பு. குறிப்பாக எல்லோரும் எதிர்பார்க்கும் ஒன்றுதான் பாராட்டுதலும், நன்றி செலுத்துதலும். மேற்படி இரண்டு மானிட குணாதிசயங்களே மனிதர்களை ஏனைய ஜீவராசிகளிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டிடும் அடையாளமாக தீர்மானம் செய்யப்படுகின்றது.
மனிதனுக்கு எப்போது தான் என்ற அகங்காரம் மேலோங்குமோ அப்போதே மேற்படி உளவியல் மென் பண்புகள் நிலைமாற்றம்பெற்று அதிகார அடக்குமுறை மற்றும் கட்டுப்படுத்துல் மேலாண்மை போன்ற வன் மனோவியல் பண்புகள் ஆக்கிரமிக்கத்தொடங்குகின்றது. இதன் அடுத்த தாக்கம் வெறுப்புத்தொழிற்சாலை என்ற ஆளிடை இடைவெளி உருவாகின்றது.
"நன்மையை நாடி நல்ல பொருள் எதனை நீங்கள் செலவு செய்தாலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், பிரயாணம், தொழில் போன்றவற்றில் கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்" (அல்-குர்ஆன் 4:36, 2:215, 30:38, 59:7)
மேற்படி புனித வேதத்தின் வசனங்கள் இதனையே உணர்த்தி நிற்கின்றது. மென்மையான உரையாடல், நடத்தை பண்புகள் என்பன பண்பாட்டியல் ஒழுக்கவியல் சார்ந்த ஒரு நடைமுறை வழிகாட்டுதலை கற்பிதம் செய்கிறது.
“நீங்கள் இருவரும் அவனிடம் (சாந்தமாக) மென்மையான சொல்லால் சொல்லுங்கள்; அதனால், அவன் நல்லுபதேசம் பெறலாம்; அல்லது அச்சம் கொள்ளலாம்” (அல்-குர்ஆன் 20:44)
No comments:
Post a Comment