உதாரணமாக பாருங்கள்
வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை வட்டத்தில் கூட்டுப்புழு, மயிர்கொட்டி, வண்ணத்துப்பூச்சி என்ற மூன்றுநிலை பருவங்கள் உண்டு. ஒவ்வொரு பருவமும் அதன் வாழ்க்கைச் சூழல் தொடக்கம் உணவுப்பழக்கம் வரை ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டு காணப்படுகின்றது. இதனால் உணவு, இருப்பிடம் மற்றும் பாதுகாப்பு தொடர்பிலான சூழலியல் போட்டி தவிர்க்கப்படுகின்றது.
இவ்வாறுதான் நாம் வாழும் மானிட சூழலில் ஒவ்வொரு தனியனும் ஏனைய தனியனில் இருந்து அல்லது சாராரின் இருந்து மாறுப்பட்ட தேடலை கொண்டுள்ளதனால் சமூகவியல் போட்டி இழிவளவு செய்யப்படுகின்றது. அறிவு, ஆன்மிகம், அதிகாரம், பொருளாதாரம் என்று வியாபிக்கும் இந்த தேடல் தளம் ஒவ்வொரு மனிதனையையும் தனித்துவமாய் காண்பிக்கின்றது. அத்தோடு நுகர்வு சமூகத்தில் அவனது உலகத்தையும் அது சார்ந்த மானிட தொடர்புகளையும் பல்வகைமை காண்பிக்கின்றது. அத்தோடு அதுவே ஒவ்வொருவரின் அடையாளத்தையும் பதிக்கிறது.
எனவே எமது உலக அடையாளம் எமது தேடலை சார்ந்தே தீர்மானம் செய்யப்படுகின்றது என்பதை கருத்திற்கொண்டால் போதும் எமது வளர்ச்சியை தானாக வழிசமைத்துக்கொள்ள இலகுவாகவிருக்கும்.
No comments:
Post a Comment