உறங்குநிலையில் குரோதங்களையும், நயவஞ்சக பண்பியலையும் உள்ளத்தில் நிரம்பிய சமூக வைரசுகள் அவர்கள். படுமோசமான தீராத நோய்களையும் காயங்களையும் உண்டாக்கும் வலிமை இவைகளுக்கு உண்டு. ஆரம்பத்தில் சமூக நீரோட்ட ஓடையில் தாங்கள்தான் கரையொதுக்க உதவும் ஓடங்கள் என்ற பிரமையை உண்டாக்கி வஞ்சனைமிகு சொற்பிரயோகம் மற்றும் செயல்பிரயோகம் என்பவற்றினால் தங்களை தாங்களே மக்கள் அவையில் அடையாளப்படுத்த முயற்சிப்பார்கள். இவர்கள் எம்மோடு சேர்ந்து எம்மோடு வாழும் ஒட்டுண்ணிகள்.
அடிப்படையில் கில்லியெறியப்படா விட்டால் அடுத்த தலைமுறைக்கும் இந்த உளவியல் தொற்று பிணியை சேர்பித்துவிடுவார்கள். அந்தஸ்து, அதிகாரம் தங்களை சார்ந்தவர்கள் இடத்தில் குவிக்கப்படவேண்டும் என்ற மனோவியல் நோயும் இவர்களை ஆட்கொண்டு இருக்கும். இதனால் தங்களை சாராத இன்னுமொரு சமூக உறுப்பினர்களின் அடையாளப்படுத்தல் மற்றும் வளர்ச்சியை ஜீரணிக்க முடியுமால் தங்களை அவர்களாகவே உளவியல் காயப்படுத்தி மேலும் மேலும் உள்ளத்தில் கொண்ட நோயை வளர்த்துக்கொள்வார்கள். அத்தோடு இவர்களுடன் இயங்கும் ஏனையோரையும் வழிகெடுக்க வீண் ஐயங்களை உண்டுப்பன்ன முயற்சிப்பார்கள்.
இவ்வாறான மானிடர்களிடத்தில் சமூகப்பொதுவெளி அதிகாரம் அளிக்கபப்படுமாயின் பாரதூரமான எதிர்விளைவுகளை நாம் எதிர்பார்த்து நிற்கவேண்டியிருக்கும்..
"பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான்" (அல்-குர்ஆன் 114:4,5)
"அவர்களுடைய இதயங்களில் ஒரு நோயுள்ளது; அல்லாஹ் அந்த நோயை அவர்களுக்கு இன்னும் அதிகமாக்கி விட்டான்" (அல்-குர்ஆன் 2:10)
No comments:
Post a Comment