பொது உலக வாழ்வியலில் ஒவ்வொரு தனியனும் தன் சார்ந்த திறன் விருத்தியை வெளிப்படுத்தவும், வளப்படுத்தவும் ஏதோவொரு களம் அத்தியவசியமாக தேவைப்படுகின்றது. இந்த களம் அவன் வாழ்கின்ற சூழல் கட்டமைப்பின் உட்கட்டமைப்பு, பொருளாதாரம், மானிட அறிவியல், அறவியல் மற்றும் சமூக மேம்பாடு போன்றன செல்வாக்குச்செலுத்தும்.
சமூக அபிவிருத்தி சார் கட்டுமானங்கள் நோக்கி தன்னார்வத்தோடு முன்வரும் சமூக ஆர்வலர்களை அந்த அமைப்பின் விதிமுறைகள், நிர்வாகிகள் மற்றும் செயற்பாடுகள் எப்போதும் ஊக்குவிப்பதாகவே அமைதல் அவசியம். அத்தோடு விடப்படும் தவறுகள் முறையாகவும் பக்குவமாகவும் எடுத்துரைக்கப்படுவதும் மிக அவசியமாகும்.
பல்லின சிந்தனை மற்றும் செயலாற்றுகையின் மூலமாக வெளியிடப்படும் வெளியீட்டிற்கும் தனி மனித முயற்சியாண்மை ஊடாக வெளியிடப்படும் வெளியீடுகளுக்கும் பாரியளவிலான நிலைபேறியல் வேறுபாடு காணப்படும். அத்தோடு இப்பண்பியல் நாம் ஒவ்வொருவரும் வளர்த்துக்கொள்ளவேண்டிய காரணியாகும். பாகுபாடுகள் கொண்ட மனித வளங்களையும் அவர்களின் சிந்தனை மற்றும் செயற்பாடுகளையும் ஒருங்கிணைப்பு செய்வதிலேயே சமூகவியல் அபிவிருத்தி பேண்தகு அபிவிருத்தியாக உருமாற்றப்படுகின்றது.
No comments:
Post a Comment