
நாம் கண்முன்னே காணும் ஒவ்வொரு மானிட தனியனும் அவனுக்கான தனித்த இலக்கு மற்றும் இலட்சியங்கள் வழிவகுத்த பாதையில் நடைபோடும் சாமானியனே. ஆனால் மிக நீண்ட இலக்குகள் கொண்டு நகரும் இலட்சியவாதிகளின் நகர்வுகள் முன்னெடுப்புகள் மற்றும் வியூகங்கள் என்பன இவ்வாறான சாமானியர்களின் பாதைகளை போன்று அமைவதில்லை.
தனது சூழலில் உண்டாகும் எதிர் அலைவுகளை சமப்படுத்தும் வகையிலான மறுதாக்க அலைவுகளை உண்டாக்கும் திறன் மற்றும் திட்ட வியூகங்கள் கொண்டிருக்காவிடின் குறித்த இலட்சியவாதிகளினால் தங்களின் தொலைவு இலக்கை அடைந்துவிட சாத்தியமில்லை. ஒவ்வொரு மானிடருக்கு தனக்குள் மிக நீண்ட இலட்சியத்தை கொண்டு நகரும் போது பொதுவெளியில் இவர்களினால் வெளியீடு செய்யப்படும் எண்ணக்கருக்களாகட்டும் செயலாற்றுகையாகட்டும் அவற்றின் பின்விளைவுகள் உண்மையில் மிக ஆரோக்கியமான ஒன்றாகவே காணப்படும்.
No comments:
Post a Comment