
1. தாலிக்கயிறு - கழுத்தில் இடப்படும் கயிறு
2. நாணயக்கயிறு/ மூக்கணாங்கயிறு - மூக்குத்துவாரம் ஊடாக இடப்படும் கயிறு
3. தலைக்கையிறு - தாலிக்கயிறு மற்றும் மூக்கணாங்கயிறு இரண்டையும் இணைக்கும் கயிறு
4. பூட்டாங்கயிறு - வண்டிளோடு மாட்டை இணைக்கும் கயிறு
மேற்குறித்த ஒவ்வொரு கயிறுக்கும் ஒவ்வொரு தொழிற்பாட்டு நிலை உண்டு. இவை ஒவ்வொரு கயிற்றின் தொடர்புடமை வலுவான காரணத்தினால்தான் வண்டில் காரனினால் தனது கட்டுப்பாட்டில் அந்த மாட்டு வண்டிலை வைத்திருக்க முடியும். இதற்கு தலைமை கயிறு பெரிதும் உதவும்....
இப்போது விடயத்திற்கு வருவோம்...
சில விடயதானங்களை இப்போது பேசுவது பொருத்தமற்ற சந்தர்பமாக இருந்தபோதும் இப்போது கூட பேசாவிட்டால் எப்போதுதான் பேசப்போகின்றோம் என்று கேள்வி எழுந்துவிடும்...
எந்தத் தளத்தில் நாம் எமது தவறை தொடர்ந்தும் விடுகின்றோம் என்று எம்மால் யூகிக்க முடிகின்றதா?
முடியுமாக இருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ளும் மனோநிலை எம்மால் காண்பிக்கப்படும் விஸ்வாசத்தினால் எதிர்க்க முடியாது போகின்றது.
எப்போது எதிர்த்துக் கேள்வி கேட்கும் எழுமாற்று விகிதம் அதிகரிக்குமோ அப்போதுதான் எம் சமூகம் சார்ந்த உரிமை மற்றும் சலுகை விடயங்கள் மீள் நிரப்பப்பட சாத்தியமாகும். இல்லையேல் தொடர்ச்சியான பிரிவினைவாதம் ஊடாக எமது அதிகாரங்களும் எமது கழுத்தில் இடப்பட்ட அடிமை சங்கிலியும் இன்னோர் கையிலேயே தங்கி இருக்கும்.
தலைமை கயிறும் அதனை பிடித்துள்ள பாகனும் எவ்வாறு அந்த மொத்த வண்டிலையும் அதனுள் கொண்டுசெல்லப்படும் பொதிகளையும் குறித்த இடத்திற்கு காவிக்கொண்டு செல்ல முக்கியத்துவம் வாய்ந்தாக அமையுமோ அதுபோலத்தான் எமது சமூகத்தின் ஒவ்வொரு துறைசார் தலைமை பீடமும் அதன் நிர்வாகிகளும் தொழிற்படுகின்றார்கள்....
No comments:
Post a Comment