இந்த நிலையில் சமூகத்தில் தனியன் மற்றும் மிகச்சிறு சாரார் செய்யும் பண்பாட்டியில் தவறுகள் குறித்து இவ்வாறு சுட்டிக்காட்டுகின்றது.
"இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் சட்ட வரம்புகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பவனுக்கும் அவற்றை மீறி நடப்பவனுக்கும் உவமை - ஒரு சமுதாயத்தைப் போன்றதாகும்.
அவர்கள் கப்பலில் தங்களுக்கு இடம் பிடிப்பதற்காகச் சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். அதன்படி அவர்களில் சிலருக்குக் கப்பலின் மேல் தளத்திலும் சிலருக்குக் கீழ்த் தளத்திலும் இடம் கிடைத்தது. கீழ்த் தளத்தில் இருந்தவர்களுக்குத் தண்ணீர் தேவைப்பட்டபோது அதைக் கொண்டு வர அவர்கள் மேல் தளத்தில் இருப்பவர்களைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. அதனால் மேலே இருந்தவர்களுக்குச் சிரமம் ஏற்பட்டது. அப்போது, கீழ்த் தளத்தில் இருந்தவர்கள் தமக்குள் 'நாம் தண்ணீருக்காக நம்முடைய பங்கில் கீழ்த் தளத்தில் ஓட்டையிட்டுக் கொள்வோம்; நமக்கு மேலே இருப்பவர்களைத் தொந்தரவு செய்யாமலிருப்போம்' என்று பேசிக் கொண்டார்கள். அவர்கள் விரும்பியபடி செய்து கொள்ள அவர்களை மேல் தளத்தில் உள்ளவர்கள்விட்டுவிட்டால் கப்பலில் இருப்பவர்கள் அனைவரும் அழிந்து போவார்கள். ஓட்டையிட விடாமல் அவர்களின் கரத்தைப் பிடித்துக் கொள்வார்களாயின் அவர்களும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள். அவர்களுடன் மற்ற அனைவரும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள்" (புஹாரி 2493)
மேற்படி ஹதீஸ் அடிப்படையில் தனியன் அல்லது ஒரு குறிப்பிட்ட சாரார் செய்யும் வழிமுறைகள் அந்த சமூகத்தை பாதிக்கும் விதமாக உணரப்படின் அது குறித்து தட்டிக்கேற்கும் அதிகாரம் மற்றும் பொறுப்புடமை அந்த சமுதாய ஒவ்வொரு நபர்களையும், அது சார்ந்து பணிவிடைகள் மேற்கொள்ளும் சமூக அமைப்புகளையும் இன்னும் சமூக நிர்வாகத் தலைமைகளையும் சாரும் என்பதை உணர்ந்துகொண்டால் பண்பாட்டில் குறைபாடுகள் சீர்திருத்தப்படவும் அவை சார்ந்த வெற்றிடங்கள் மீள் நிறப்பப்படவும் ஏதுவாகும்.
No comments:
Post a Comment