சமுதாயத்தின் மத்தியில் வாழும் ஒவ்வொரு நபரும் அந்த சமுதாயத்தின் கட்டுமானம் மற்றும் உறுதிப்பாட்டை சமச்சீரான தாங்கும் வகையில் தொழிற்படுவது கடமை. இந்த கடமை எப்போது தளர்வடைய அல்லது சீர்குலைய ஆரம்பமாகுமோ அப்போது சமூகக் கட்டுமானத்தில் நிலைகுலைவு அல்லது உறுத்தியற்ற தளம்பல் நிலை தோன்றும்.
"அவர்கள் கப்பலில் தங்களுக்கு இடம் பிடிப்பதற்காகச் சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். அதன்படி அவர்களில் சிலருக்குக் கப்பலின் மேல் தளத்திலும் சிலருக்குக் கீழ்த் தளத்திலும் இடம் கிடைத்தது.கீழ்த் தளத்தில் இருந்தவர்களுக்குத் தண்ணீர் தேவைப்பட்டபோது அதைக் கொண்டு வர அவர்கள் மேல் தளத்தில் இருப்பவர்களைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. அதனால் மேலே இருந்தவர்களுக்குச் சிரமம் ஏற்பட்டது. அப்போது, கீழ்த் தளத்தில் இருந்தவர்கள் தமக்குள் 'நாம் தண்ணீருக்காக நம்முடைய பங்கில் கீழ்த் தளத்தில்) ஓட்டையிட்டுக் கொள்வோம்; நமக்கு மேலே இருப்பவர்களைத் தொந்தரவு செய்யாமலிருப்போம்' என்று பேசிக் கொண்டார்கள். அவர்கள் விரும்பியபடி செய்து கொள்ள அவர்களை மேல் தளத்தில் உள்ளவர்கள்விட்டுவிட்டால் (கப்பலில் இருப்பவர்கள்) அனைவரும் அழிந்து போவார்கள். ஓட்டையிட விடாமல் அவர்களின் கரத்தைப் பிடித்துக் கொள்வார்களாயின் அவர்களும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள். அவர்களுடன் மற்ற அனைவரும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள்" (புஹாரி 2493)
சமூகத் தலைவர்கள், சமயத் தலைவர்கள், பொதுமக்கள், பெண்கள், சமூக ஆர்வலர்கள், புத்திஜீவிகள் மற்றும் இதர துறைசார் சமூக அங்கத்தவர்கள் என்று ஒவ்வொரு தரப்பாரும் அவரவர்களுக்கு உரிய கடமை பொறுப்புகளை உணர்ந்து அதற்கு ஏற்றால்போல் செயற்படுவதில்தான் ஒட்டுமொத்த சமூக வாழ்வியல் ஒழுங்குமுறைக்குள் தொடர்ச்சியாக தொழிற்பட வழிசமைக்கும் என்பதை உணர்ந்துகொள்ளவேண்டும்.
இதேவேளை ஒரு தரப்பார் விடுகின்ற தவறுகள், அறியாமையை விமர்சனம் மூலமாக சீரமைப்பு செய்யவும், அதனை உரியமுறையில் நியாயம் கேற்கவும் அந்த சமூகத்தை சார்ந்த ஒவ்வொருவருக்கும் பூரண உரிமை, அனுமதி, அங்கீகாரம் மற்றும் அதிகாரம் உண்டென்றும் நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
No comments:
Post a Comment