
நம்ப முடியவில்லையா..?
இதைதான் cold welding என்று கூறுவது
நமக்கு மிக பரீட்சயமான உருக்கி ஒட்டும் (Welding) பற்றி கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். மிக வெப்பமான நெருப்பு சுவாலை கொண்டு உலோகதுண்டுகளை உருக்கி, ஒட்டி பின்னர் குளிர வைப்பார்கள். அது 'hot welding'. ஆனால் விண்வெளியில் அது அவசியமில்லை. ஒரே வகை அணுக்களாலான (உ+ம் :- இரும்பு Fe ) வேறு எந்த படையாலும் மூடப்படாத, சுத்தமான இரண்டு பொருட்களை ஒன்றுடன் ஒன்று தொட செய்தால் போதும்; அப்படியே இணைந்து ஒரே துண்டாக மாறிவிடும் ! பூமியில் ஏன் இது சாத்தியமில்லை..? விண்வெளியில் மட்டும் எப்படி முடிகிறது...?
அதற்கு காரணம் 'வளி'(காற்று). பூமியில் அனைத்து பொருட்களை சுற்றியும் வளி அல்லது ஏதேனும் வேறு அணுக்களாலான படை இருக்கும். (உ+ம்:- ஒக்சைட் படலம்...) ஆனால் விண்வெளியில் வளியே இல்லை. இதை பற்றி ஒரு விஞ்ஞானி இப்படி கூறுகிறார் :- "நீங்கள் விண்வெளியில் இரண்டு ஒரே அணுக்களாலான பொருட்களை சேர்க்கும்போது அவை இரண்டும் வேறு வேறான பொருட்களுக்கு சொந்தமானவை என்று அவற்றுக்கே தெரியாது. அதனால் உடனே ஒன்றாகி விடுகின்றன. ஆனால் பூமியில் அவற்றுக்கு இடையே இருக்கும் ஏதாவது ஒன்று உண்மையை அந்த அணுக்களுக்கு காட்டிக்கொடுத்து விடுகின்றன."

No comments:
Post a Comment