
ஒரு சமூகம் அளவை நிறுவையில் மோசடி செய்த காரணத்தினால் அச்சமூகம் அழிவை சந்திக்க நேரிட்டது. அல்குர்ஆன் இந்த மனித சமூகத்தை நோக்கி அன்று எதிர்வுகூறிய வார்த்தைகளை இன்று நான் கண்முன்னே காண்கிறேன்.
"நபியே இவர்களிடம் கூறும்: ஒருவேளை என் அதிபதியின் அருட்களஞ்சியங்கள் உங்கள் கைவசத்தில் இருந்திருந்தால் செலவாகிவிடுமோ எனும் அச்சத்தில் நிச்சயம் அவற்றை நீங்கள் பதுக்கி வைத்திருப்பீர்கள். மனிதன் உண்மையிலேயே குறுகிய மனம் படைத்தவனாக இருக்கின்றான்" (அல்-குர்ஆன் 17:100)
"அவர்கள் மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கும் போது நிறைவாக அளந்து வாங்குகின்றனர். ஆனால், அவர்கள் அளந்தோ, நிறுத்தோ கொடுக்கும்போது குறைத்து நஷ்டமுண்டாக்குகிறார்கள்" (அல்-குர்ஆன் 83:2,3)
மேற்படி இரு வசனங்களும் சந்தர்ப்ப சூழ்நிலையை காட்டி எச்சரிக்கை செய்யும் மிக முக்கிய வசனங்களாகும். எம்மத்தியில் பெயரளவில் வாழ்கின்ற மனித ஒட்டுண்ணிகள் கவனத்தில்கொண்டு திருத்திக்கொள்ளவேண்டிய சமூக பொறுப்புடைமை வாய்ந்த நட்கிரிகை ஒன்றினை குறித்த இரு வசனத்தின் எதிர்மறை கருத்து வலியுறித்தி நிற்கின்றது. எனவே எமது சமூகத்தில் இக்கட்டான அனர்த்த நிலையில் உதவி செய்யும் நல்லுள்ளம் கொண்ட நபர்களின் தர்மங்கள் விஸ்தீரணம் அடையும்....
"அல்லாஹ்வுடைய வழியில் தங்கள் பொருள்களைச் செலவழிப்போர்களின் செலவுக்கு உவமானம், ஒரு தானிய விதையைப் பயிரிடுவது போன்றதாகும். அதிலிருந்து ஏழு கதிர்கள் முளைக்கின்றன! ஒவ்வொரு கதிரும் நூறு தானிய மணிகளைக் கொண்டுள்ளது. இவ்வாறு அல்லாஹ் தான் நாடுவோருக்கு பன் மடங்காக்குகின்றான்" (அல்-குர்ஆன் 2:261)
No comments:
Post a Comment