நம் கண்கள் தாம் காண்பவற்றை மிக வேகமான camera போல, செக்கனுக்கு பல தடவைகள் படம் பிடிக்கின்றன. பிறகு, நம் மூளை அதை ஒரு திரைப்படம் போல, நமக்கு தொடர்ச்சியாக போட்டு காண்பிக்கிறது.
அதாவது நாம் ஒரு பொருள் அசைவதை காணும்போது, உண்மையில் பல தனியான படங்களின் தொடர்ச்சியைத்தான் பார்க்கிறோம். இதில், ஒரு தனியான படத்திற்கு frame என்று பெயர். ஒரு காரின் சக்கரம் அசைவதைகூட கண்கள் இப்படிதான் படம்பிடிக்கின்றன. இப்படி, நமது கண்கள் படம்பிடிக்கும் ஒரு frame இற்கும், அடுத்த frame இற்கும் இடையில், அந்த சக்கரம் எவ்வளவு தூரம் சுழன்று இருக்கும்...!?
அனால், கொஞ்சம் கீழாக. அதாவது சக்கரத்தில் ஒரு புள்ளியை எடுத்துக்கொண்டால், அது முதல் frame இல் இருந்த இடத்தை விட, அடுத்த frame இல், கொஞ்சம் கீழே இருக்கும். அப்போ நமது மூளை, "ஓஹோ ! புள்ளி / சக்கரம் கீழே கொஞ்சம் அசைந்து இருக்கிறது" என்று நினைத்துக்கொள்கிறது.
No comments:
Post a Comment