
ஆனாலும் அரசியலை தீர்மானிக்கும் மானிடவியல் வளங்களை பொருத்தமட்டில் நாம் மூன்றுவிதமாக நோக்கலாம்.
அதாவது ஒருவர் அரசியல்வாதியாக அவருக்கு மூலகாரணமாக அமையும் காரணி....
சமூகசேவை
பெரும்பாலான அரசியல்வாதிகள் சிறந்த சமூக சேவை மனப்பாங்கு கொண்டவர்கள். அவர்கள் அரசியல் அற்ற சூழ்நிலையில் சமூகத்திற்காக உழைக்க தங்களின் நேரம், காலம், உடல், பொருள், ஆவியை தியாகம் செய்திருப்பார்கள்.
அவ்வாறானவர்கள் அரசியல் களத்தில் நுழையும் போது பொதுநிலை அங்கீகாரம் மட்டுமன்றி சேவை விரிவாக்கத்தளம் பரந்துபட்டு பரவலாக்கம் பெறவும் இன்னும் வளங்கள், அதிகார பகிர்வாக்கம் தங்களிற்கு கிடைக்கப்பெறும் என்ற அடிப்படை நோக்கோடு சமூகத்தின் நலனுக்கான தங்களை அரசியல் வாதிகளாக முடிசூடிக்கொள்கின்றார்கள்....
பெரும்பாலான அரசியல்வாதிகள் இவ்வாறு வந்தவர்கள் தான். ஆனாலும் முன்னுள்ளோர் அவர்களை இவ்வாறு தொடர்ந்தும் இருக்க விரும்புவதுமில்லை, விடுவதுமில்லை... இதனால் விரக்தியுற்று இரண்டாம் தரப்பார் நிலைக்கு மாற்றம் பெறுவார்கள்....
தன்னிலை வளர்ச்சி
மேற்கூறிய முதலாம் தரப்பாரைப் போன்ற எண்ணமுடைவர்களே இவர்கள். ஆனால் இவர்களின் முழுக்கவனமும் தங்களின் சுய இலாபத்தை அடிப்படையாகக்கொண்டது. இவர்கள் மூலமாக பல வேலைத்திட்டங்கள் அரங்கேற்றப்படும். அப்போதுதான் தங்களின் பக்கட் நிரம்புமல்லவா?
ஆனாலும் இவர்கள் அதிகார வர்கப்பின்னணி, நீண்ட அரசியல் முதிர்ச்சி, பெரும் சமூக, மானிடவியல் ஆளிடைத்தொடர்பு கொண்டவர்களோடு சமூக அந்தஸ்தும் பெற்றவர்கள். இவர்கள் செய்யும் மோசடிகளை சமூகம் பெரிதுபடுத்துவதில்லை. காரணம் இவர்களை நம்பி சமூகம் தொக்கி நிக்கும்...
அத்தோடு இவர்கள் தரமுள்ளதோ தரமற்றதோ பல அபிவிருத்திகளை சமூக அரங்கில் அறிமுகம் செய்வார்கள். இவர்களினாலே அரசியல் சாக்கடை என்ற சமூக நிலைப்பாடு தோன்றக் காரணமாக அமைகிறது.
சுயகௌரவம்
மூன்றாம் தரப்பார் வெகு சொற்பமானவர்கள். ஆனாலும் அரசியல் களத்தில் மாறுபட்ட சிந்தனை போக்கை காட்டுவார்கள். இவர்கள் பெரும்பாலும் மோசடி, பணத்தாசை அற்றவர்களாக இருப்பார்கள். காரணம் பெருமை, கௌரவம், சமூக அந்தஸ்தை நோக்கமாக கொண்டதனால் சமூக சேவையை சுய மரியாதைக்கவும், மற்றவர் காண்பிக்கவும் மேற்கொள்வார்கள்.
மூன்றாம் தரப்பினர் புதுமுக அரசியல் வாதியாகவும் மற்றும் கல்வி, ஒழுக்கம், ஆளுமை விருத்தி பெற்றவர்களாகவும் இருப்பார்கள். இவர்களின் அபிவிருத்திகள் குறைவாக இருந்தபோதும் பயன்மிக்கதாக தூரநோக்கம் கொண்டதாகவும் சமூகம் பேசும் அபிவிருத்தியாகவும் அமையும். அத்தோடு தங்களின் மேல் கரைகள் படிவத்தை விரும்பாமை காரணமாக சமூக விரோத செயல், அரசியல் மோசடி போன்றவற்றில் ஒதுங்கி இருப்பார்கள்.
No comments:
Post a Comment