
முதியவர்கள் அல்லது ஏற்கனவே நோய்வாய்பட்டவர்கள் இருக்கும் வீடுகளில் உள்ளவர்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். இயன்றளவு பயனங்களை குறைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொறு வீடுகளுக்கு வெளியேயும் sanitizer என்கின்ற கை சுத்திகரிப்பு மருந்துகளையோ அல்லது liquid soap களையோ வைத்துவிட வேண்டும். யார் வீட்டிற்கு வந்தாலும் கைகளை நன்றாக கழுவிவிட்டு உள்ளே வருவதற்கு ஆலோசனைகளை வழங்க வேண்டும். கட்டி சவர்க்காரத்தை விட்ட liquid soap மிகவும் நல்லது.
சிறுவர்களுக்கு இந்த வைரஸ் தொற்று வந்தாலும் அவர்களது உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தி அவர்களை மிக விரைவில் குனமடைய வைத்துவிடும். அது மனதிற்கு ஆறுதலான விடயம். ஆனால் சிறுவர்கள் நோய் காவிகளாக சில வேலை இருப்பார்கள். பக்கத்து வீட்டிற்கு விளையாடச் சென்ற சிறுவர்கள் அங்கிருந்து வைரசைக் கொண்டு அதன் மூலம் வீட்டில் உள்ள முதியவர்கள் உட்பட அனைவருக்கும் பரவும் வாய்ப்புக்கள் உள்ளன.
இயன்ற வரை சனநெரிசல் உள்ள இடங்களைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். முடியுமானவர்கள் மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள். பஸ்களில் பிரயானம் செய்யும் போது முகத்தை தொடுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். தும்மல் அல்லது இருமல் வரும் போது tissues அல்லது கைக்குட்டைகள் மூலம் மூடிக் கொள்ளுங்கள். பொது இடங்களுக்குச் செல்லும் போது முடிமானவர்கள் அடிக்கடி hand sanitizers களின் மூலம் கைகளை சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள். பாதையோரங்களில் எச்சில் துப்புவதை முற்றாக தவிர்த்துக் கொள்ளுங்கள்.
தடிமன், இருமல், அல்லது காய்ச்சல் போன்ற நோய் அறிகுறிகள் இருக்குமேயானால் உடனடியாக வைத்தியரை நாட வேண்டும். கூட்டமாக உள்ள இடங்களைத் தவிர்க்க வேண்டும். அது பொதுச் சந்தைகளோ, திருமண வைபவங்களோ அல்லது மதசடங்குகளாகவோ எதுவாக இருந்தாலும் சரி. சனநெரிசல்கள் உள்ள கடைகள் சுப்பர்மார்க்கட்டுகளில் முண்டியடித்துக் கொண்டு பொருட்கள் வாங்குவதை முற்றாக தவிர்க்க வேண்டும். காய்ச்சல் போன்ற நோய் அறிகுறி உள்ளவர்கள் பள்ளிவாயல்களுக்குச் செல்வதைத் முற்றாக தவிர்க்க வேண்டும். நிலமை சீராகாமல் விட்டால் தற்காலிகமாக பள்ளிவாயல்களை மூடுவதற்கு உலமா சபை உடனடியாக பரிசீலிக்க வேண்டும். மக்கள் வீடுகளிலேயே தொழுது கொள்ளலாம்.
எம்மை பெற்று வளர்த்த முதியவர்களை காப்பாற்றுவோம். எங்களை நாங்கள்தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். வருமுன் காப்போம்.
No comments:
Post a Comment