ஒவ்வொரு மனிதனும் தான் படைக்கப்பட்ட காரணத்தை எப்போது உணர்ந்து கொள்கிறானோ அப்போதே அவன் சென்றடைய வேண்டிய பாதை கண்முன்னே தெளிவாக காண்பிக்கப்படுகின்றது. அதுவரை ஒரு வித்தின் உறங்குநிலை காலங்களை போல் சூழல் தாக்கத்திற்கு எதிர்வினையாற்றாமல் உயிரற்ற ஜடமாகவே தான் வாழும் சூழலில் எதுவித பயனுமற்ற மானிடனாக தொழிற்படுவான்.
இலட்சியம் நிலையான ஒன்றாக இருந்தபோதும் அதற்கான பாதைகள் பல எமது சூழலில் பரவிக்கிடக்கின்றது என்பதுவே உண்மை. ஆனால் அந்த பாதையில் பயணிக்க முடிவெடுத்துவிட்டோம் என்றால் அந்த பாதையை எமக்கு ஏற்றால்போல் வழிசமைக்கும் வேண்டிய பொறுப்புடமை எம்மை சார்ந்தது. இல்லையேல் இலக்கை அடையமுடியாத ஒரு கோழையாக நிச்சயம் உங்களை நீங்காளே கண்டுகொள்வீர்கள்.
மாற்றங்களும், மாறுதல்களும் தொடர்ந்து எமது வாழ்க்கை சூழலில் ஏற்படுத்தும் அதிர்வலைகள் வாழ்க்கையின் சுவையை சுவாரஸ்யமானதாக மாற்றுகின்றது. இதனை உணரும் மானிடன் தனது இலட்சியத்தை மேலும் மேலும் நேசிக்க கற்றுக்களோள்வதோடு அந்த மாற்றங்களில் தான் காணும் அனுகூலங்களை பற்றி அதிகம் அலசி ஆராய்கிறான் என்பதே உண்மை.
No comments:
Post a Comment