Mutur JMI

𝙅𝙪𝙣𝙖𝙞𝙙 𝙈𝙤𝙝𝙖𝙢𝙚𝙙 𝙄𝙝𝙨𝙝𝙖𝙣 𝐀𝐮𝐭𝐡𝐨𝐫 | 𝐏𝐮𝐛𝐥𝐢𝐬𝐡𝐞𝐫 | 𝐖𝐫𝐢𝐭𝐞𝐫 | 𝐅𝐫𝐞𝐞𝐥𝐚𝐧𝐜𝐞 𝐉𝐨𝐮𝐫𝐧𝐚𝐥𝐢𝐬𝐭 👉 𝙒𝙚𝙗𝙨𝙞𝙩𝙚 – www.jmi-mutur.com 👉 𝙈𝙖𝙞𝙡 – ihshanjm@gmail.com 👉 𝙁𝙖𝙘𝙚𝙗𝙤𝙤𝙠 – Ihshan J.M.I Mohamed - www.facebook.com/JMI.Ihshan 👉 𝙁𝙗 𝙥𝙖𝙜𝙚 Professional - Mutur JMI – www.facebook.com/IhshanJMI Personal - Ihshan JMI – www.facebook.com/MuturJMI 👉 𝙄𝙣𝙨𝙩𝙖𝙜𝙧𝙖𝙢 – Ihshan JMI - www.instagram.com/ihshan_jmi 👉 Contact 0771020030

Business

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, June 4, 2020

புவி தன்னை தானே சுழல்வதை சடுதியாக நிறுத்திவிட்டால்????

Knowing Burning Earth Wallpapers | HD Wallpapers | ID #8276சுருக்க பதில் - "பூமியின் மேற்பரப்பில் உள்ள வளிமண்டலம்,பெருங்கடல்கள் நிலம் என அனைத்தும் மாறி, அழிந்து விடும்"
நாசாவின் கூற்றுப்படி, பூமி தன்னைத்தானே சுழலும் இயக்கம் திடீரென நிறுத்தப்பட்டால், அடி பகுதியில் உறுதியாக இல்லாத அனைத்தையும் இடமாற்றம் செய்யப்படும். இதற்குக் காரணம், பூமியின் சுழல் நிறுத்தப்பட்டாலும், வளிமண்டலம் அதன் வேகத்தில் தொடர்ந்து இயக்கத்தில் இருக்கும், அதாவது, மணிக்கு 1100 மைல்கள் (மணிக்கு 1770 கி.மீ).
எனவே, பூமியின் மேற்பரப்பில் உறுதியாக இணைக்கப்படாத அனைத்தும் தரையில் இருந்து, வீசப்படும். அதாவது பறக்கும் என்று வைத்துக்கொள்ளலாம். பெரிய பாறைகள், மேல் மண், கட்டிடங்கள், வாகனங்கள், மனிதர்கள் கூட வளிமண்டலத்தால் தூக்கி எறியப்படும். பெருங்கடல்கள் சுமார் 60 வினாடிகளில் 28 கிலோமீட்டர், நிலபரப்பிற்குள் பரவும். அதாவது சுனாமி. இதெல்லாம் நடந்தால், ஏதேனும் உயிருடன் இருக்குமா?
Rotation and Revolution of the Earth - QZealandபூமி சுழல்வதனூடாக உருவான புவிக்காந்த புலம் சடுதியாக மாற்றமடையும். அதாவது பூச்சியத்தை எட்டும். இதனால் பூமியில் உண்டாகும் நிலையற்ற காந்தவியல் பண்பு காரணமாக பூமியில் காணப்படும் உலோக மற்றும், மின்னியல் பிணைப்புகள் தளர்வுற்று அழிவடையும்.
திடீரென்று அல்லாமல், பூமி சுற்றுவது மெதுவாக குறைந்தால் என்ன ஆகும்?
பூமியின் உருவம் பார்ப்பதற்கு கோளம் போன்று இருக்கும். ஆனால் அது கோளம் அல்ல. geoid shape என்று கூறுவார்கள்.
இந்த geoid வடிவத்தில் இருப்பதால் எல்லா பகுதிகளும் சமமாக இருக்காது. அதாவது பூமத்தியரேகை இருக்கும் பகுதியில் கொஞ்சம் பெரிதாக(bulge) இருக்கும். அது துருவங்ககை நோக்கி செல்ல செல்ல குறைந்துக் கொண்டே இருக்கும். தொடர்ந்து சுழன்று கொண்டு இருப்பதால் தான் இந்த நடுப்பகுதி கொஞ்சம் bulge ஆக உள்ளது. சுற்றுவதை நிறுத்திவிட்டால் பூமி, geoid ஆக அல்லாமல் கோளமாக மாறிவிடும். சமமற்ற தன்மையை சரி செய்ய நிலப்பகுதி பூமியின் மையத்திலும் கடல்கள் துருவங்களை நோக்கியும் செல்லும்.
Earth's Rotating Inner Core Shifts Its Speed | Live Scienceவளிமண்டலம் பூமியுடன் சேர்ந்தே தான் சுற்றுகிறது. இருப்பினும் பூமியின் சுழற்சி குறைந்து வருவதால், வளிமண்டலம் துருவங்களை நோக்கி பெருங்கடல்கள் போலவே செல்லத் தொடங்குகிறது. துருவங்களில் காற்று அதிகமாகவும் பூமத்திய ரேகையில் குறைவாகவும் இருக்கும்.
பூமி மூன்று முக்கிய அடுக்குகளைக் கொண்டுள்ளது - அகணி, இடைத்தட்டு மற்றும் மேலோடு. ஒவ்வொரு அடுக்கும் வெவ்வேறு பொருள்களால் ஆனது. பூமியின் சுழற்சி மெதுவாக குறையும் போது, ஒவ்வொரு அடுக்குகளுக்கும் இடையே உராய்வை உருவாக்கும். இந்த உராய்வு பூகம்பங்களையும எரிமலைகளையும் உருவாக்கும். குறிப்பாக கடல் தரை பகுதிகளில்.
Sun's coronal holes are about to release solar winds towards Earth ...பூமியின் சுழற்சி மற்றும் அதன் மையப்பகுதி (உலோக இரும்பு) ஆகியவற்றின் கலவையால் தான், பூமியின் காந்தப்புலம் உருவாகிறது என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். பூமி சுழல்வதை நிறுத்தி கொண்டே வந்தால், காந்த புலம் சூரியனின் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்வீச்சு மற்றும் சூரியக்காற்றால் (solar winds) பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
சுழற்சி குறைந்து மொத்தமாக நின்று விட்டால், சூரியனை நோக்கியுள்ள பகுதியில், பகலும் ( 6 மாத காலம்), அதற்கு எதிரே உள்ள பகுதியில், இரவும் (6 மாத காலம்) இருக்கும்.
Klaus Badelt - The Time Machine (Original Motion Picture ...
தற்போது, ​​பூமியின் சுழற்சி சந்திரனை விட வேகமாக உள்ளது, இதன் விளைவாக சந்திரன் பூமியிலிருந்து மெதுவாக நகர்கிறது. சுழற்சி நிறுத்தப்பட்டால், சந்திரன் பூமியை நோக்கி நகரத் தொடங்கும். சந்திரன் பூமியுடன் மோதுகிற வரை அல்லது பூமியின் ஈர்ப்பு நிலவை உடைக்கும் வரை தொடர்ந்து பூமிக்கு நெருக்கமாக நகரும்.
பூமி சுழல்வதை நிறுத்தினால் பெரும்பாலான மனிதர்கள் உயிர்வாழ மாட்டார்கள் என்றாலும், சிலர் இருப்பார்கள். பல விலங்குகள் அழிந்து போகும். ஆனால் குளிர்ந்த நீர், கடலில் வாழ்ந்த மற்றவை உயிர்வாழ சந்தர்ப்பமுண்டு. (Directors Simon Wells, Gore Verbinski தயாரிப்பில் 2002 இல் வெளியான Time Machine திரைப்படத்தை பார்க்க)
பூமியின் சுழற்சி உண்மையில் ஒரு நாள் சுழல்வதை நிறுத்தப் போகிறது, ஆனால் அதற்கு பில்லியன் பில்லியன் ஆண்டுகள் ஆகும். எனவே இதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டாம்!

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages