
உண்மையில் சமூக உணர்திறனாற்றும் பிராணியாக நீங்கள் இருப்பதனால்!!!
கருத்துக்களை உள்வாங்கும் சமூக பொது அவை முதிர்ச்சி உங்களுக்கு அத்தியவசியம். இந்த முதிர்ச்சி இலகுவாக பெற்றுக்கொள்ளும் ஒரு விடயமல்ல.. இது ஒரு சமூகவியல் வரம் என்றுதான் கூறவேண்டும்.
பிழையை, தவறை, குறைப்பாட்டை மற்றும் குற்றத்தை நடுநிலையோடு ஏற்றுக்கொண்டு அதனை திருத்திக்கொள்ளும் பண்பு ஒருவகை சமூக உளவியல் சார்ந்த ஆற்றல் ஆகும். இதனை அடைந்துகொள்ள நீங்கள் எதிர்பார்ப்பற்ற தன்னார்வத்தொண்டனாக முதலில் உங்களை நீங்களே வடிவமைத்துக்கொள்ள வேண்டியது கட்டாயம்.
வீண் குற்றச்சாட்டுகள், பலி சுமத்தல்கள் மற்றும் ஒருதலைபட்ச விமர்சனங்கள் என்பவற்றை ஏற்றுக்கொள்ளும் அப்பாவிகளாகவும், இயலாவாளிகலாகவும் நீங்கள் உங்களை பரதிபலித்துவிடமுடியாது. இது படு மோசமான சமூக எதிர்விளைவை உங்கள் மேல் அல்லது உங்களைச் சார்ந்தவர்கள் மேல் உண்டாக்கும்.
மக்கள் வயமாக்கப்பட்ட சமூக அடையாளங்கள் உங்களின் தனி ஆற்றல் திறன்களை மேம்படுத்த உதவும் உந்துவிசைகள்தான். இவை உங்களின் அல்லது நீங்கள் சார்ந்த சாராரின் சமூக முதிர்ச்சியில் எப்போதும் தங்கியிருக்கும் என்பதை உணரும்போது உங்களால் வெளியிடப்படும் ஜனநாயக செயலாற்றுகை வினைத்திறனடையும்...
"சமூக எதிர்ப்புகள் நீ எதிர்கொள்ளவில்லை எனில்
இன்னும் நீ சமூக மயமாக்கப்படவில்லை"
Zikra Nawhal இன் சமூகப்பார்வை வரியொன்றை இவ்விடத்தில் மேற்கோளிடுகிறேன்.
No comments:
Post a Comment