ஆனால், ஒரு தீர்வினைத் தேடி நம் பல்வேறு அனுபவத்தில் இருந்து சாதகபாதகங்களை அலசி தீர்வெட்ட முயலும்பொழுது அதீத கவனம் தேவைப்படுகின்றது. அது சமயம் நம் மூளை சற்று ஒரே இடத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கின்றது. அதனால், புறத்துறுப்புகளில் இருந்து வரும் செய்திகளை அது புறக்கணிக்க வேண்டும்.
அதற்கேதுவாக, ஐம்புலன்களையும் சற்று நேரம் அது உதாசீனப்படுத்தும். நாம் இருப்பது பாதுகாப்பான இடம் என்று உறுதியாகத் தெரிந்தால் கண்களை மூடிக்கொள்ளச் செய்யும். இல்லாவிட்டால், திறந்தே இருக்கும், ஆனால், அதிகம் அசைந்து வெளிக்காட்சிகளை உள்வாங்காது. நிலைகுத்தி நிற்கச் செய்தால்தான் பல்வேறு காட்சிகள் உள்ளே வருவதை குறைக்க முடியும்.
ஆயினும், முற்றிலும் எந்தச் செய்தியையும் புறக்கணிக்காது. ஆபத்தின் உச்சம் என்றொரு அளவை எட்டும் வரைக்கும் எந்தச் செய்தியையும் உள்வாங்காது உறையச் செய்திருக்கும். ஆபத்து என்கிற நிலையில், சிந்தனையை விடுத்து, உயிர்பிழைத்திருப்பதுதான் மிக முக்கியம் என்று, புலன்களைக் கவனிக்க ஆரம்பித்து விடும். உயிர் பிழைத்திருந்தால்தான் சிந்திக்க முடியும் என்று அதற்குத் தெரியும்.
No comments:
Post a Comment