கிருஸ்துவ வளர்ச்சியின் பின்னர் அதன் பற்றாளர்கள் தங்கள் மதத்தை மேன்மை தங்கிய மாதமாக பிரகடனப்படுத்தினார். இதனால் அக்காலத்தில் பின்பற்றப்பட்டு வந்த யூதா கொள்கை மதவாதப் போரை தூண்டியது. கொன்ஸ்தாந்து நோபிளை மையமாக்கொண்டு உலகம் பூராகவும் இந்த மத அடிப்படைவாதம் போதிக்கப்பட்டு உலகம் முழுவதும் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கை பிரகடனம் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டது.
இந்த தொடர்ச்சியின் பின்விளைவு நிறுவப்பட்ட அறிவியலையும் மதத்தோடு மட்டுப்படுத்த முயற்சித்தமை. இதனை சேர் ஐஸாக் நியூட்டன், கலிலியோ கலீலீ, டாவின்சி போன்ற சிந்தனைவாதிகள் அக்காலத்தின் அதிகாரமிக்க திருச்சபை மற்றும் அரசசபையில் கூட எதிர்ப்பலையை உண்டாகினார்கள்.
"மனிதம் தாண்டிய மதம் என்பது முட்டாள்களின் வாதம்" என்ற Zikra Nawhal இன் கூற்றை இங்கே அடிப்படையாக்கொண்டு இந்நாட்களில் உலகளாவிய ரீதியாக மனித இனம் எதிர்கொண்டுள்ள சவாலை இறையியல் வேதங்கள் வலியுறுத்தும் மனித மான்புநில. பண்புகள், நம்பிக்கை ரீதியில் அணுகுவதே உசிதம். சிந்தனை ரீதியாக போராடவேண்டிய சமூகம் நாம். ஆனால் நாம் உணர்ச்சிநிலைகளுக்கும், மதக்கோட்பாடுகளும் முன்னிலைப்படுத்துவதன் காரணமாக முட்டாள் சமூகமாக எம்மை நாம் அடிக்கடி நிரூபித்துக்கொண்டு இருக்கிறோம். அதுமட்டுமல்லாது எமக்கு சம்மந்தமே இல்லாத விடயங்களில் தலைபோடுகிறோம். இன்னும் அடுத்தவொரு சமூக பிரச்சினை எம்மை பேசுபொருளாக்கும் வரையே எமது ஆவேசமும், ஆக்ரோஷமான மார்க்க பற்றுதலும் பரவச நிலைகளும் காணக்கூடியாதகவுள்ளது...
"உங்களுக்குச் சிறிது ஞானம் இருந்த விஷயங்களில் இதுவரை நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தீர்கள்; அப்படியிருக்க உங்களுக்குச் சிறிதுகூட ஞானம் இல்லாத விஷயங்களில் ஏன் விவாதம் செய்ய முற்படுகிறீர்கள்?" (அல்-குர்ஆன் 3:66)
No comments:
Post a Comment