பகிர்ந்தளிப்பு என்பது வெறுமனே பெண், பொன், பொருள் சார்ந்த சடப்பொருட்கள் சார்ந்தவை மட்டுமல்ல. மாறாக குணாதிசயங்கள், இயல்புகள் மற்றும் பண்புகள் சார்ந்த உணர்வியல் அறிவு என்ற வகையும் இதில் உள்ளடக்கமுடியும். எம்மிடம் இருந்து நாம் பகிர்தளிப்பு செய்யும் மிக உன்னதமானதும் பெறுமதி அளவீடு செய்யமுடியாததுமான ஒன்றுதான் பண்பாட்டியில் குணங்களும் அது சார்ந்த செயற்பாடுகளும்.
ஒவ்வொரு மனித ஜீவனும் அவன் சார்ந்த தொழிற்பாட்டியல் சூழலில் செலுத்தும் தனித்தனியான தாக்கம் அந்த சூழலின் ஒட்டுமொத்தமாக விளையுள் வெளிப்பாடாக வெளிப்பாடும். இந்த விலையுள் தான் அந்த சூழலில் காணப்படும் மானிட பண்பியல் மற்றும் செயற்பாட்டியல் அடைவாகும். வெறுமனே இது குறித்த காலத்தின் மதீப்பீடாக இருந்துவிடாது. இது மிக நீண்ட கால எல்லைப்பரப்பையும் அது சார்ந்த சமாந்தர மானிட இயல்பியல் அம்சங்களையும் வகையீடு செய்யும் வெளிப்படு வரைபுநிலை குறிகாட்டியாகும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
எந்தவொரு சமூகம் தனது நாகரிக முயற்சியான்மையை நோக்கி நகர ஆரம்பிக்குமோ அந்த சமூகத்தின் குறிகாட்டிகள் எப்போதுமே உரிமை, சமத்துவம், சலுகை சார்ந்த மற்றும் மனித ஆற்றல், திறன் என்பதோடு பண்புகள் சார்ந்த பகிர்ந்தளிப்பு மதிப்பாய்வுகள் உயர்ந்த நிலையில் வெளிக்காட்டப்பட்டு இருப்பதை கண்டுகொள்ளலாம். இதற்காக அந்த சமூகத்தில் தலைமைபீடம் தொடக்கம் மேட்டுக்குடி, இடைத்தட்டு மற்றும் அடித்தட்டு வகுப்பார் சார்ந்த மூவகை குடிகளும் ஒத்த கண்ணோட்டத்தோடு தொழிற்பட்டு இருப்பதை அவதானிக்க முடியுமாகவிருக்கும்.
No comments:
Post a Comment