
உங்களால் ஒரு துறையில் பூரண ஈடுபாட்டை அளிக்கமுடியும் என்றால் அதுவே உங்களுக்கான தளம் என்ற புரிதல் அற்ற காரணத்தினால்தான் எம்மால் ஆளத்துவ அடையாளப்படுத்துகையில் பாரிய பின்னடைவை எதிர்நோக்குவது மட்டுமன்றி சேவை நுகர்வு வீதத்தையும் முறையாக அனுபவிக்கமுடியாது போகின்றது.
ஒரு தனி நபர் ஒருவர் தனது தேவைகளை நிவர்த்தி செய்துகொள்ள அறிவை தேடவேண்டியது கடமை. இருந்தபோதும் எல்லா துறைகளையும் அறிந்துகொள்ள முயற்சிப்பதினால் அவனால் சமூக ஆளிடை தொடர்பினை கிரகித்துக்கொள்ளும் எழுமாற்று விகிதம் மந்தமாகின்றது. இந்த காரணத்தினால் குறித்த நபரில் இருந்து வெளியீடு செய்யப்படும் எந்தவொரு மென், வன் ஆற்றல் அறிவு மற்றும் ஆற்றுகைகள் ஒப்பீட்டு அளவில் கூட்டு முயற்சியின் மூலம் வெளியிடப்படும் வெளியீடுகளை விட தரம் குறைவானதாகவே காணப்படும்.
ஏனெனில் தனி மனித சிந்தனை, செயலாற்றுகை கூட்டு மனித ஈடுப்பாட்டில் ஒருங்கிணைப்பு செய்யப்படும் பல்லினத்துவ சிந்தனை, செயலாற்றுகைக்கும் பாரிய வேறுபாடு காணப்படுவது சகஜம்தான்.
No comments:
Post a Comment