
கடந்தகாலங்களில் நாங்கள் விட்ட தவறுதலாக இருக்கட்டும் நிகழ்காலம் நாம் இழைக்கும் அறியாமைகளாக இருக்கட்டும் அவை எப்போதும் எமது சமூகப்பொது வாழ்வியலில் எம்மோடு நிழல்போன்று ஒட்டி உலவிக்கொண்டுதான் இருக்கும். எதிர்மறை கண்ணோட்டம் என்பது பொதுவாக மனித நாகரீகத்தோடு நேர்விகிதசம பரிணாமம் அடையும் காரணியாகும்.
இந்தப்போக்கை புரிந்துகொண்டு சமூகப்பொதுவெளியில் நுழையும் போது மட்டுமே எம்மால் விமர்சனங்களை தாண்டிய அசைவுகளை ஒரு ஓய்வில்லாமல் கொண்டு செல்ல முடியும். தனிநபர் வாழ்வியலில் விடுகின்ற மற்றும் உண்டாக்கப்படும் தவறுகள், குற்றங்கள் சமூகம் சார் நடப்பில் பாரியதொரு மறுதாக்கத்தையும் அழுத்தத்தையும் உண்டாக்கும். அதுமட்டுமன்றி சார்புடைமை சார்ந்த சாரார்களும் இதனால் துணை பாதிப்பை அனுபவிக்கவும் வாய்ப்புள்ளது.
No comments:
Post a Comment