
சமூகத்தின் ஒரு வலைப்பின்னல் அமைப்பில் ஒவ்வொரு கட்டமைப்பு ரீதியாக குறித்த தனியன் அடித்தட்டு, இடைத்தட்டு மற்றும் மேல்தட்டு தகுதியை பெற்றுக்கொள்கிறான். உதாரணமாக பொருளாதாரம், கல்வி அறிவு, உடலியல் திறன் ஆற்றல் மற்றும் அதிகார அந்தஸ்து என்று ஒரு சிலவற்றை முன்னுதாரணமாக கட்டமைப்பாக குறிப்பிடலாம்.
பெரும்பாலான மனித சாகிய அமைப்பியல் (கிராம / ஊர் நிலை) மட்டத்தில் அந்த சூலில் காணப்படுகின்ற உயர் அதிகாரிகள், அனுபவம் வாய்ந்த ஆன்மீக தலைவர்கள் மற்றும் மூத்த ஓய்வுநிலை சமூக ஆர்வலர்களை கொண்ட உயர்பீட குழுக்கள் காணப்படலாம். இந்த கட்டமைப்பு உருவாக்கமே பெரும்பாலான மானிட வளத்தின் நுகர்வை தடையாக்கி முடக்கி வைக்கும் முக்கிய பங்கினை பெற்றுவிடுகின்றது. ஏனெனில் குறித்த அமைப்பில் உயர்பீட அங்கத்தவத்தை பாரம்பரிய சிந்தனை முகாம்களில் வளர்ந்தவர்கள் நிரப்பிவிடுவதனால் எந்த நோக்கத்திற்காக குறித்த தனியன் அந்த சமூகத்தில் துறைசார்ந்து தொழிற்படுகின்றானோ அவனது குறித்த தனி சுயாதீன ஆற்றல், அறிவை துஸ்பிரயோகம் செய்யும் வீண் வேலைத்திட்டங்களில் முதலீடு செய்ய காரணமாகிவிடுகின்றது.
சமூகத்தில் தனித்த ஆற்றல், அறிவுக்கான வாய்ப்பு வசதிகளை குறித்த தனியனுக்கு வழங்கி அங்கீகாரம் அளிக்கும் போது சமூக மட்டத்தில் கூட்டு ஈடுபட்டு வெளிப்பாடாக மிக பயனுரிதி வாய்ந்த சமூகநல வேலைத்திட்டங்கள் துரிதமாக செயலாற்ற வலுவளிக்கும்.
No comments:
Post a Comment